Monday, August 12, 2013

கடவுளிடம் சென்ற காக்கை

டேனியின் வயது அப்போது நான்கு இருக்கும்.

அவனை கிண்டர்கார்டன் ஸ்கூலிலிருந்து சாயங்காலம் வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தேன்.

வீடும் ஸ்கூலும் பக்கம்தான் என்பதால் நடந்தே அழைத்துச் செல்வதும் திரும்பக் கூட்டி வருவதும்தான் வழக்கம்.

அன்றும் அப்படித்தான் கூட்டி வந்து கொண்டிருந்தேன்.

சாலையோரம் கிடந்த கூழாங்கற்களை எடுப்பதும் எறிவதுமாக வந்து கொண்டிருந்தவன் திடீரென கலவரமாய்க் கூப்பிட்டான்.

“அம்மா... அங்க பாத்தியா.?”.

அவன் காட்டிய திசையில் சாலையோரத்தில் ஒரு காகம் இறந்து கிடந்தது.

கொஞ்சம் முன்புதான் இறந்திருக்க வேண்டும்.

பளபளப்பு மாறாமல் அப்படியே இருந்தது அந்தக் காகம்.

அதன் அருகே செல்ல விடாமல், டேனியை சற்றே என் பக்கமாய் இழுத்தபடி நடக்கையில் அவன் கேட்டான்.

“ஏம்மா அந்த காக்கா அப்பிடிக் கெடக்குது.?”.

அந்தக் காக்கை இறந்துவிட்டது என்பதை குழந்தைக்கு எப்படிச் சொல்வது என்று புரியாமல், நான் எல்லோரும் சொல்வதுபோல், “அது சாமிகிட்டப் போயிடுச்சுடாதங்கம்.!” என்றேன்.

நான் சொன்னதும் ஏதோ புரிந்தது போலவே யோசித்தபடி வந்த டேனி மறுபடி கேட்டான்.

"ஏம்மா... சாமி கிட்டப் போன காக்கா எப்பிடி இங்க கெடக்குது.? கருப்பா இருக்குனு புடிக்காம சாமி திரும்ப தூக்கி எறிஞ்சிட்டாரா.?”.
.
.
.

5 comments:

Unknown said...

கருப்பா இருக்குனு புடிக்காம சாமி தூக்கி எறிஞ்சிட்டாரா? பிஞ்சு மனதில் இப்படி ஓர் எண்ணமா?

maithriim said...

குழந்தை மனதிலும் கருப்பு என்றால் ஆகாது என்ற எண்ணம் பாருங்கள்! :(

amas32

ddrd said...

super madam

Saravana kumar said...

ஆசாம் ஆசாம்

Unknown said...

யதார்தம் மின்னுகிறது உங்கள் கதையில்..

Post a Comment