Saturday, August 10, 2013

டயட்டு

கணவர் காலில் அடிபட்டு படுத்திருக்கும் சமயம்.

ரெண்டு மூணு மாசம் படுத்திருக்க வேண்டியிருப்பதால் வெய்ட் ஏறாமல் இருக்க கண்டிப்பாக டயட் மெய்ண்டெய்ன் பண்ண டாக்டர் அட்வைஸ் செய்திருந்தார்கள்.

எனவே கலோரி கம்மியான, மசாலா குறைத்து, ஆயில் ஃப்ரைகள் எல்லாம் தவிர்த்து அவருக்கு செய்து வைத்துவிட்டு, நானும் டேனியும் வழக்கம் போல் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

அந்த ஞாயிறு அன்று மதியம் அப்படித்தான்.

டேனி காளான் ஃப்ரையும், காலி ஃப்ளவர் க்ரேவியும் கேட்க... அவனுக்கு அதை செய்துவிட்டு, அவருக்கு எப்பவும் போல் கோதுமை அரிசி சாதமும் வெண்டைக்காய் சாம்பாரும் பரிமாற ஆரம்பித்தேன்.

பாதி சாப்பிட்டிருப்பார்.

அதன் பிறகு நானும் டேனியும் சாப்பிட அமர்ந்தோம்.

சாப்பிடுக் கொண்டே திரும்பியவர், நாங்கள் சாப்பிடுவதைப் பார்த்து விட்டு பரிதாபமாகக் கேட்டார்.

“டயட்லயே மிகக் கொடுமையான பார்ட் என்னனு தெரியுமா.?”

சாப்பிட்டுக் கொண்டே நிமிர்ந்து அவரை எதுவும் புரியாமல், “என்னது.?” என்று கேட்டபடி  நான் பார்க்க, அவர் தொடர்ந்து சொன்னார்.

“டயட்லயே கொடுமையான பகுதி... சாப்பிட என் தட்டுல என்ன இருக்குனு பாக்கறத விட, பக்கத்துல இருக்கறவங்க தட்டுல என்ன இருக்குனு பாத்துட்டு சும்மா இருக்கறதுதான்.!”.
.
.
.

3 comments:

சென்னை பித்தன் said...

அவர் பார்க்கச் சாபீட்டது உங்க தப்பு!

'பரிவை' சே.குமார் said...

உண்மைதான்... அவரு சாப்பிடும் போது நீங்களும் ப்ரைகளை குறைத்திருக்கலாம்...

இராஜராஜேஸ்வரி said...

டேஸ்ட் பார்க்க கொஞ்சம் கொடுத்திருக்கிளாமே..

அதனால் ஒன்றும் எடை ஏறிவிடாது..!

Post a Comment