Saturday, January 7, 2012

விட்டமின் மாத்திரைகள்

டேனியை பள்ளியிலிருந்து அழைத்து வந்த ஒருநாள் மாலையில் நடந்தது இது.

என் பக்கத்து வீட்டுப் பெண் செல்போனில் அழைத்து, வரும் வழியில் அவரது ஒரு வயதுக் குழந்தைக்கு ஏதோ ஒரு விட்டமின் மாத்திரையின் பெயரும் அது பவுடர் போல இருக்கும் என்றும் சொல்லி அதை வாங்கி வர முடியுமா என்று உதவி கேட்டார்.

"கண்டிப்பாய்..!" என்று சொல்லி செல்லை அணைத்துவிட்டு, மெடிக்கல் ஷாப் வந்து சேர்வதற்கான பத்து நிமிடத்தில் அந்த விட்டமின் மாத்திரையின் பெயரை சுத்தமாய் மறந்து விட்டிருந்தேன்.

திரும்பவும் அவருக்கு ஃபோன் பண்ணிக் கேட்டால், நாம் எவ்வளவு கவனக்குறைவாய் இருக்கிறோம் என்று நினைத்து விடுவாரோ என்று முதலில் மெடிக்கல் ஷாப்பிலேயே கேட்டுப் பார்க்கலாம் என முடிவு செய்தேன்.

மெடிக்கல் ஷாப்பில் இருந்தவரோ, ஒரு வயதுக் குழந்தைக்கான பவுடர் வடிவ விட்டமின் மாத்திரைகள் என்று இன்னும் பத்துப் பதினைந்து பேரைச் சொல்ல இருந்த கொஞ்ச ஞாபகமும் போய் குழப்பத்துடன் விழித்தேன்.

நான் குழம்புவதைப் பார்த்த மெடிக்கல் ஷாப்காரர் எனக்கு உதவுவதற்காக, "மேடம்.. அது விட்டமின் ஏயா,பியா இல்ல சியான்னாவது சொல்ல முடியுமா..?" என்று கேட்டார்.

அதுவரை பேசாமல் எங்கள் இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த டேனி, இப்போது மெடிக்கல் ஷாப்காரரைப் பார்த்துச் சொன்னான்.

"எது வேணா குடுங்க அங்கிள். அவன் ரொம்ப சின்னப் பையன். அவனுக்கு இன்னும் ஏ,பி,சி,டி எல்லாம் தெரியாது...!" என்றான்.
.
.
.

12 comments:

துளசி கோபால் said...

ஹாஹாஹாஹா..... என் செல்லம் டேனி!!

இனிய புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.

maithriim said...

LOL Problem solved :-) Nice post!
amas32

Gokul Prasad said...

நகைத்து வை

செல்வா said...

கலக்கல் அண்ணா! வாய்ப்பே இல்லை :)ரொம்ப நல்லா இருக்கு :))

Ravikumar said...

சூப்பர்!!!

Unknown said...

செம்ம காமெடி .........

Mohamed Faaique said...

டேனியோட பன்ச் சூப்பர்... ரொம்ப ரசிச்சேன்...

anandrajah said...

படிச்சே நமக்குத்தானே குழப்பமெல்லாம்னு சொல்ற மாதிரி... ,,,, மாதிரி என்ன மாதிரி ... குழப்பமே தான்.. ! தெளிவாசொல்லிடிடான்யா டேனி...! சூப்பெறு..!

karthi.bsr said...

கலக்கல் டேணி வாழ்த்துக்கள். மேலும் எதிரபார்க்கிறேன்

Suresh Subramanian said...

காமெடி அருமை...நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

rajkumarin said...

Like

rajkumarin said...

Like

Post a Comment