Wednesday, January 18, 2012

டாய்லெட் எங்கே இருக்கு.?


டேனி படிக்கும் யூகேஜி வகுப்பிற்கு அன்றுதான் புதிதாக வந்திருந்தான், பள்ளிக்கே அன்றுதான் புதிதாய் வந்திருந்த அச்சுத்.

வந்தவன் நேராய் டேனிக்கு பக்கத்தில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தான்.

புதிதாய் வந்த பயத்துடனும் தயக்கத்துடனும் இருந்த அச்சுத்... கொஞ்ச நேரத்தில் லேசான கூச்சத்துடன் எழுத்து, "மிஸ்..!" என்று ஒற்றை விரலை உயர்த்தினான்.

ஆசிரியை அவன் புதிதாய் வந்தவன் என்பது தெரியாமல் தலையாட்ட, அவன் தயக்கத்துடனே வெளியே போய் ஐந்து நிமிடங்களில் வகுப்பு வாசலுக்கு திரும்ப வந்தான்.

"மிஸ்... எங்க இருக்குனு தெரியல..!".

குழப்பத்துடன் நிமிர்ந்து பார்த்த ஆசிரியை அவன் புதியவன் என்பதை உணர்ந்ததும், "நேராய் போய் லாஸ்ட்ல லெஃப்ட். சீக்கிரம் போய்ட்டு வா..!" என்று சொல்லிவிட்டு வகுப்பைத் தொடர ஆரம்பித்தார்.

இப்போதும் அதைவிடத் தயக்கத்துடன் மெல்ல தலையாட்டியபடி நகர்ந்த அச்சுத், ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்து இன்னும் பாவமாய் சொன்னான்.

"மிஸ்... எங்க இருக்குனு தெரியல..!".

சற்றே கோபத்துடன் நிமிர்ந்த ஆசிரியை அச்சுத்தை பார்த்துவிட்டு டேனியிடம் திரும்பி சொன்னார்.

"டேனி.. கோ அன்ட் ஹெல்ப் ஹிம்...!".

டேனி எழுந்து வேகமாய் ஓடிய ஐந்து நிமிடத்தில், சந்தோசத்துடனும் நிம்மதியுடனும் வந்த அச்சுத் அவன் இருக்கையை நோக்கிப் போய் அமர, பின்னாலேயே வந்த டேனியிடம் ஆசிரியை கேட்டார்.

"என்ன ஆச்சு.? டாய்லெட் முன்னாலயே தான இருக்கு.? ஏன் அவன் எங்க இருக்குனு தெரியலனு சொன்னான்.?".

ஆசிரியை கேட்டதும் டேனி கூச்சத்துடன் டேனி தலையைக் குனிந்தபடி சொன்னான்.

"மிஸ்... அவனுக்கு டாய்லெட் எங்க இருக்குனு தெரிஞ்சுடுச்சு. ஆனா, விட்டுலருந்து வர்ற அவசரத்துல ட்ரவுசர திருப்பி போட்டுட்டு வந்துட்டான். அதத்தான் எங்க இருக்குனு தெரியலனு சொல்லிட்டு இருந்திருக்கான்..!" என்றான்.
.
.
.

7 comments:

நடராஜன் said...

விவிசி! :)

ரேகா ராகவன் said...

ஹ..ஹ..ஹா.........இது சூப்பர் நகைச்சுவை!

சாகசன் said...

நண்பா !!! கடைசி வரில கொஞ்சம் அரண்டுட்டேன் !!! வாழ்த்துகள் நண்பா !! :))

jeganjeeva said...

ஹா ஹா ஹா. நான் லெப்ட் எதுன்னு தெரியலன்னு நினச்சேன். சூப்பர் :)))

karthikeyan.kg. said...

Funny lol.

aaru... said...

ஹி ஹி நோ கமன்ட்ஸ்!!!

Anonymous said...

ஹா ஹா ஹா

Post a Comment