Thursday, April 21, 2011

ஓவியர் தில்லுதுர

தில்லுதுர வாழ்க்கையில் ஒரு படைப்பாளியாய் மாற முயற்சித்துக் கொண்டிருந்த காலம் அது.

பிசினஸ், பேங்க், லோன், அக்கவுண்ட் என வாழ்க்கை இப்படியே மெஷின்போல போய்விடுமோ என்று பயந்துபோய் விட்டார் அவர்.

'கிரியேட்டிவாய் யாராவது ஒரு ஐடியா சொல்லுங்களேன்..' என்று கேட்டபோது, அவர் நண்பர் ராஜாதான் ஓவியம் கற்றுக்கொள்ளும் யோசனையைச் சொன்னார்.

தில்லுதுரக்கும் அந்த ஐடியா பிடித்துப் போக, உடனே அதைச் செயல்படுத்த ஆரம்பித்தார்.

ஓரிரு மாதங்கள் தபால் மூலம், அப்புறம் லோக்கலில் ஒரு ஆசிரியரிடம் என்று ஒவியக்கலையை கொலை செய்யத் தொடங்கினார்.

மேலும் ரெண்டு மாதம் போயிருக்கும்.

தில்லுதுர வேக வேகமாய் ஓவியராய் வளர்ந்து கொண்டிருந்தார்.

நாய் படம் போட்டால் காக்காய் போலிருந்தது.

மயில் படம் போட்டால் மாரடோனா படம் போலிருந்தது.

தில்லுதுர கடைசியாய் ஓவியத்தில் தன்னுடைய ஏரியாவைக் கண்டே பிடித்துவிட்டார்.

அது... இனி நமக்கு மாடர்ன் ஆர்ட் தான் பெஸ்ட் என்பதே..!

முதன்முதலாய் ஒரு மிகப் பெரிய கேன்வாஸ் வாங்கி, எல்லா நேரமும் அதில் ஆயில் பெயின்டால் தீட்டிக் கொண்டே இருந்தார்.

அவருடைய 'தாட்'டுகள் அதில் ஏற ஏற... அந்த் ட்ராயிங் யாருக்கும் புரியாததாய் அற்புதமாய் வடிவம் பெற ஆரம்பித்தது.

அந்த ஓவியத்தை விடக் கொடுமை அவருடைய ஓவியம் குறித்த பேச்சுக்கள் தான்.

பிக்காஸோ,பிதாகரஸ்,வான்கா,டேலி போன்றோர் குறித்து அடிக்கும் லெக்சரர்கள் இருக்கிறதே, அனுபவித்தர்களால்தான் சொல்ல முடியும்.

எல்லாக் கொடுமையையும் தாண்டி, கடைசியாய் ஒரு ஆறு மாதத்தில் தில்லுதுர அந்த ஓவியத்தை வரைந்து முடித்தே விட்டார்.

அந்த ஓவியம் ஒன்றும் சாதாரண ஓவியம் இல்லையே..!

அதனால், அந்த ஓவியம் குறித்து அலுவலகத்தில் ஒரு அறிமுக விழா நடத்த முடிவு செய்து தேதியும் குறித்தாகிவிட்டது.

அறிமுக விழாவில், அந்த ஓவியமும் அதில் உள்ள தத்துவங்களும், சமகால ஓவியங்களில் அது எவ்வாறு சிறந்தது என்று ஒரு பேருரையும் நிகழ்த்தினார்.

எல்லா மொக்கைகளும் முடிந்த பிறகு ஏதவது ஒரு பொதுத் தொண்டு நிறுவனத்திற்கு அதை வழங்க முடிவு செய்து, எந்த நிறுவனதுக்கு வழங்கலாம் என்று சிறந்த ஐடியா தருபவருக்குப் பரிசும் அறிவித்தார்.

வந்த முடிவுகள் எவ்வளவோ இருந்தாலும், பரிசு பெற்ற ஐடியா ஒன்று இருந்தாலும்... ரிஜெக்ட் செய்யப்பட்ட ஒரு ஐடியாவையே சிறந்தது என்று அவர் நண்பர்கள் எல்லோரும் இன்றுவரை பேசி வருகிறார்கள்.

அது...

"இந்த ஓவியத்தை நீங்கள் கண்பார்வையற்றோர் நிறுவனத்துக்கு வழங்கியிருக்கலாம்..!" என்பதே.
.
.
.

7 comments:

பாட்டு ரசிகன் said...

என்ன ஒரு புத்திசாலிதனம்...

சென்ஷி said...

//

"இந்த ஓவியத்தை நீங்கள் கண்பார்வையற்றோர் நிறுவனத்துக்கு வழங்கியிருக்கலாம்..!" என்பதே. //

அடங்கொக்கமக்கா.. :))))

Mohamed Faaique said...

////http://faaique.blogspot.com/2011/04/equal-3.html//

யாருப்பா இந்த ஐடியாவ ரிஜக்ட் பண்ணினது?

செல்வா said...

தில்லு இவ்ளோ கஷ்டப்பட்டு வரஞ்ச ஓவியத்த ரசிக்கத் தெரியாதவங்க சொன்ன ஐடியா இது. ஹி ஹி

சாகம்பரி said...

Whatever it is the problem is solved ( Thillu dura and his terror painting). very good.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

தில்லுதுர யின் திறமை.பார்வையற்றவர்களும் பார்க்கும் ஓவியம்...

இராம்குமார் said...

அது பேசும் ஓவியமாக்கும் ?!!!!!!!!!!!!!!!!

Post a Comment