Friday, April 1, 2011

டேனியும் தில்லுதுரயும்
அன்று அலுவலகத்திலிருந்து மாலை அபார்ட்மென்ட்டுக்கு வந்த தில்லுதுர, தனது நாயை பார்த்ததும் அரண்டுவிட்டார்.

பக்கத்து வீட்டு சுட்டிப்பையன் டேனி பாசமாய் வளர்த்து வந்த கிளிக்குஞ்சை வாயில் கவ்வியபடி நின்றிருந்தது நாய்.

கிளியின் உடலை கவ்வியதோடு விடாமல், மண்ணில் போட்டு புரட்டி எடுத்து வந்திருந்தது நாய்.

பார்த்ததுமே தில்லுதுரக்கு தெரிந்துவிட்டது... கிளி கண்டிப்பாய் இறந்திருந்தது.

'நம்ம நாய் கிளிய கொன்னுடுச்சுனு தெரிஞ்சா இந்த டேனிப்பய நம்ம சும்மா விடமாட்டானே..!'

வேக வேகமாய் வெளியே வந்து பார்த்த தில்லுதுர கொஞ்சம்போல நிம்மதியடைந்தார்.

டேனியின் வீட்டில் எல்லோரும் எங்கேயோ போயிருந்தார்கள்.

யோசித்த தில்லுதுர நாயின் வாயிலிருந்த கிளியைப் பறித்து, பாத்ரூமுக்கு கொண்டு போய் ஷாம்பூ போட்டுக் கழுவி, ஹேர் ட்ரையரை எடுத்து அதன் ரெக்கை எல்லாம் காயவைத்து, வேகவேகமாய் ஃப்ளாட்டின் வாசலில் இருந்த, அதனுடைய கூண்டுக்குள்ளேயே திரும்பப் போட்டுவிட்டு வந்துவிட்டார்.

இனி யாராவது பார்த்தாலும், அது இயற்கையாய் அதனுடைய கூண்டிலேயே இறந்ததாய்த்தானே நினைப்பார்கள்.

தெளிவாய் செய்துவிட்டாலும், குற்ற உணர்ச்சியில் டேனியையோ, அவன் வீட்டு ஆட்களையோ ரெண்டு மூணு நாட்கள் பார்க்காமலேயே சுற்றிக் கொண்டிருந்தார் தில்லுதுர.

ஆனால், சனிக்கிழமை மாலை காரை கொண்டு நிறுத்தியபோதே வாசலில் விளையாடிக் கொண்டிருந்த டேனி, தில்லுதுரயைப் பார்த்து ஓடி வந்தான்.

"அங்கிள்... உங்களுக்கு தெரியுமா.? என்னோட கிளி ஸ்நூஃபி செத்துப்போச்சு..!".

பாசமாய் சொல்லும் டேனியின் முகத்தை பார்க்க முடியாமல் தில்லுதுர, வருத்ததுடன் சொன்னார்.

"அப்படியாடா... பாவம் ஸ்நூஃபி. என்னாச்சு..?".

தில்லுதுர கேட்டதும் டேனி கண்களை விரித்துக் கொண்டு ஆச்சர்யமாய் சொன்னான்.

"அங்கிள்... அது ஒரு நாள் கூண்டுக்குள்ளயே செத்துக் கிடந்தது அங்கிள். எனக்கு பயங்கரமா அழுகை அழுகையா வந்துச்சு. அப்பறம், அதை நானும் அப்பாவும் அதை எடுத்துட்டு போயி ஃப்ளாட்டுக்கு பின்னாடி தோட்டத்துல பொதச்சுட்டோம். அதுக்கு அப்பறம், அப்பா என்னையும் அம்மாவையும் சாப்பிட வெளிய கூட்டிட்டு போயிட்டாரு. திரும்பி வந்து பார்த்தா யாரோ ஸ்நூஃபிய பொதச்ச எடத்துலருந்து எடுத்து குளிப்பாட்டி, திரும்ப அதோட கூண்டுலயே கொண்டு வந்து போட்டிருந்தாங்க அங்கிள். ஸோ ஃபன்னி..!" என்றான் டேனி.
.
.
.

10 comments:

வணங்காமுடி...! said...

தில்லுதுர அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா? ஸோ ஃபன்னி.....ஹா ஹா ஹா....

உமா கிருஷ்ணமூர்த்தி said...

மிக இயல்பாக இருந்தது.வாய்விட்டு சிரித்து விட்டேன்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

ஸ்ஸ்ஸ்..யப்பா தாளமுடியலையே...

Thilse Senthil said...

அய்யோ பாவம் தில்லு...

கோமாளி செல்வா said...

அட ச்சே . தில்லுதுற இப்படி ஏமாந்திட்டாரே .. ஹி ஹி ..

ramkumar said...

செம நெத்தியடி தில்லுதுரை

Mohamed Faaique said...

தில்லுதுர..... தில்லான கதை எழுதுவீங்கன்னு வந்தா, பல்பு வாங்கி இருக்கீங்க.....

இராஜராஜேஸ்வரி said...

நல்லா ஏமாந்திட்டார்.

Madhavan Srinivasagopalan said...

செமையா இருக்கு..

செல்வா வாடை அடிக்குதே..

Jeev said...

Hiyo Hiyo..

Post a Comment