Saturday, February 19, 2011

போன ஜென்மத்து ஞாபகம்

தில்லுதுர தன் வீட்டு வாசலில் உட்கார்ந்தபடி தன் நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

"கொஞ்சநாளா வேலை டென்ஷன்ல எல்லாமே மறந்து போகுதுன்னு சொன்னேனே. அதுக்கு ஒரு டாக்டரைப் போயி பார்த்தேன். அவரு அதுக்கு ஒரு மாத்திரைய ப்ரிஸ்கிரைப் பண்ணினாரு. இட்ஸ் ஜஸ்ட் அமேஜிங். நீங்க அந்த மாத்திரையை சாப்பிட்டுப் பார்க்கணுமே. அட்டகாசம்... எனக்கு இப்ப போன ஜென்மத்து ஞாபகம் எல்லாம் வந்துடும் போல இருக்கு...!".

சொல்லிக் கொண்டே சிரித்தார் தில்லுதுர.

கேட்டுக் கொண்டிருந்த நண்பர் ஆச்சர்யப்பட்டு, "அந்த மாத்திரையோட பேரு என்ன்னு சொல்லறியா..? கொஞ்சம் உபயோகமா இருக்கும்...!".

நண்பர் கேட்டதும் தில்லுதுர யோசித்தபடி சொல்ல ஆரம்பித்தார்.

"அ... அது வந்து... இரு சொல்லறேன்...! இந்த ஒரு பூ இருக்குமே. சிகப்பு கலர்ல. சின்னச் சின்னதா அழகா. செடில முள்ளு எல்லாம் இருக்குமே. பறிச்சா கையில கூடக் குத்தும். நேரு சட்டைல வச்சிருப்பாரே..!".

யோசனையாய் தில்லுதுர சொல்வதைப் பார்த்த நண்பர் குழப்பத்துடன் கேட்டார்.

"எது... ரோஜாப் பூவையா கேக்கற..?".

நண்பர் சொன்னதும் பிரகாசமான தில்லுதுர, "கரெக்ட்.. ரோஜாதான்...!" என்றபடி வீட்டின் உள்பக்கமாய் திரும்பி மனைவியைப் பார்த்துக் கத்தினார்.

"ஏண்டி ரோஜா.. அந்த மாத்திரையோட பேரு என்னடி..?".
.
.
.

8 comments:

சென்ஷி said...

ஹாஹ்ஹ்ஹ்ஹாஹ்ஹ்ஹா.... உருண்டு புரண்டு சிரிச்சிட்டு இருக்கேன் பாஸ்.. செம்ம நக்கலு :)))

சக்தி கல்வி மையம் said...

தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..

See.,

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_19.html

செல்வா said...

ஹா ஹா ... செம அண்ணா .. போன ஜென்மத்து நியாபகம் வந்திடுச்சு , ஆனா இந்த ஜென்மத்து நியாபகம் போயடுட்சா ?

Nanjil Kannan said...

அருமை :)))))))))))))

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கதை படிச்சேன்.
ரொம்ப சிரிச்சேன்.
கருத்து போட்டேன்.
ஆமாம்...
அப்புறம் ஏதோ ஒன்னு...
அட, வாக்கு அளிக்க மறந்து விட்டேன்.

Unknown said...

:))))))))))))))))))))))))))))))))))))))))))))

உங்களுடன் said...

SUPER... writting style fantastic

குறையொன்றுமில்லை. said...

ஐயோ, இவரு போனஜன்மத்துக்குபோயிட்டு, இந்தஜன்மத்தை மறந்துட்டாரா?

Post a Comment