தில்லுதுர அன்று அலுவலக வேலையாய் ஒரு மீட்டிங்கிற்காக கோவை வந்திருந்தார்.
ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தவர், போகும் இடத்தைச் சொல்லி ஒரு டாக்ஸியைப் பிடித்து ஏறி பின் சீட்டில் அமர்ந்ததும், தனது லேப்டாப்பைப் பிரித்து உட்கார்ந்தார்.
கோவையில் வேலை என்றாலும், தனது அலுவலகம் சம்பந்தமான உத்தரவுகளை சென்னைக்கும் இன்னபிற இடங்களுக்கும் மெயிலில் அனுப்ப ஆரம்பித்தார்.
கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாய்ப் போய்க் கொண்டிருந்தது.
திடீரென மீட்டிங்கிற்கு முன்பு 'சாப்பிட்டு விடலாம்' என்று தோன்றவே, 'நல்ல ஹோட்டல் எங்கே இருக்கிறது..' என்று கேட்பதற்காக டாக்ஸி டிரைவர் தோளைத் தொட்டார்.
டிரைவரின் தோளைத் தொட்டதுதான் தாமதம்.
அதிர்ந்துபோய் திக்கென ஆன டிரைவர், காரை சட்டென்று தாறுமாறாய் கண்டபடி ஓட்ட ஆரம்பித்தார்.
எதிரே வந்த ஒரு லாரியில் மோத இருந்து காரை ஒடித்த டிரைவர், அடுத்து ஒரு ஆட்டோ மேல் மோத இருந்து திருப்பி, மேடு பள்ளத்தில் எகிறி, ஒரு மரத்தில் கிட்டத்தட்ட மோதும் நிலையில் சட்டென்று ஒரு சடன் பிரேக்கைப் போட்டு நிறுத்தினார்.
தில்லுதுரயின் நெஞ்சு படவென்று அடிக்க ஆரம்பித்து, ஓயவே ஐந்து நிமிடம் ஆகியது.
டிரைவரோ நெஞ்சைப் பிடித்தபடி கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தவர், நீளமாய் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டுத் திரும்பி மெதுவான குரலில் தில்லுதுரயிடம் கேட்டார்.
"என்ன சார், இப்படிப் பண்ணிட்டீங்க..?".
தில்லுதுர மன்னிப்பு கேட்கும் குரலில் சொன்னார்.
"சாரிப்பா... நான் தான் தப்பு பண்ணிட்டேன்..!".
இப்போது லேசாய்ப் புன்னகைத்த டிரைவர், தில்லுதுரயிடம் சொன்னார்.
"இல்ல சார்... இதுல உங்க தப்பு ஒண்ணுமில்ல. எல்லாம் என் தப்புதான். நான் இப்பத்தான் புதுசா டாக்ஸி ஓட்ட ஆரம்பிச்சிருக்கேன். இதுக்கு முன்னால பத்து வருசமா ஹாஸ்பிடல்ல டெட்பாடிகளை ஏற்றிச் செல்லும் வண்டி ஓட்டிக்கிட்டு இருந்தேன்..!".
.
.
.
6 comments:
ஆஹா.... நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய....
அடப்பாவிகளா.. பாவம்யா அந்த ஆளு.. நைஸ்
இதுல உள்ள இருக்குற விசயம் “ட்ரைவர் திடுதிப்புன்னு டெட்பாடி தொட்டுருச்சுன்னு பயந்துவிட்டார்”.
அருமை...
“ட்ரைவர் திடுதிப்புன்னு டெட்பாடி தொட்டுருச்சுன்னு பயந்துவிட்டார்”. இத எதிர்பார்கல!!!!!
:)
மரணக் காமெடி போங்க...!
Post a Comment