Monday, March 5, 2012

தலைமுடி ஏன் நரைக்கிறது.?

ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலத்தில், டேனியும் அவன் அப்பாவும் ஏதோ விளையாடிக் கொண்டிருந்த சமயம் நடந்தது இது.

அவன் அப்பா நெருங்கிய நாற்பதுகளில் இருப்பதால், காதோரங்களில் நரை அங்கொன்றும் இங்கொன்றுமாய் விழத் துவங்கியிருந்ததைக் கவனித்த டேனி அப்பாவிடம் கேட்டான்.

"ஏம்பா... உனக்கு முடியெல்லாம் வெள்ளையாயிட்டு இருக்கு.?"

சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவனை நல்வழிப்படுத்த தவறமாட்டார் அவர் என்பதால் யோசித்தபடியே சொன்னார்.

"அதுவா... டேனி அவன் அப்பா சொல்றது கேக்காம குறும்பு பண்ணற ஒவ்வொரு தடவையும் அவனோட அப்பாவுக்கு ஒரு தலைமுடி வெள்ளையாகணும்னு கடவுள் சொல்லிருக்காரு... அதனாலதான்.! நீ மட்டும் குறும்பு பண்ணாம, அப்பா சொல்படி கேட்டு நல்ல பையனா நடந்தா... அப்பா தலைமுடி வெள்ளையாகாது சரியா..?".

அப்பா சொல்வதை அப்படியே நம்பிக்கையுடன் கேட்ட டேனி, "சரிப்பா..!" என்றவன் தொடர்ந்து கேட்டான்.

"ஏம்பா... அப்ப தாத்தா தலைமுடி எல்லாம் ஏன் ஃபுல்லா வெள்ளையா இருக்கு..?".
.
.
.

8 comments:

Anonymous said...

haha:)) @shanthhi

sutha said...

ஹா ஹா இதுக்கு தான் குழந்தைங்க கிட்டே பார்த்து பேசணும்னு சொல்லறது ... @sweetsudha

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா ஹா

சாகசன் said...

எங்க அப்பா ரொம்ப நல்ல அப்பா ஹிஹிஹி @kutty_twits

Anonymous said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா தாறுமாறு

Anonymous said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா தாறுமாறு

தட்சிணாமூர்த்தி said...

சூப்பரு தல....நச் "ஏம்பா... அப்ப தாத்தா தலைமுடி எல்லாம் ஏன் ஃபுல்லா வெள்ளையா இருக்கு..?". ஹா ஹா

தாய்மனம் said...

நிஜம் # பிள்ளகளின் சின்ன கேள்விக்குள் இருக்கும் அர்த்தமுள்ள பதில்கள் யாரயும் சிந்திக்க வைக்கும்

Post a Comment