Friday, March 11, 2011

தில்லுதுர என்னும் அறிவாளி

தில்லுதுரயின் கம்பெனி அன்று கோவையின் வனவிலங்கு பாதுகாப்பு வார விழாவில் பங்கெடுத்துக் கொண்டிருந்தது.

பல்வேறு கம்பெனிகளும் பலவிதமாய் பங்கெடுத்துக் கொண்டிருக்க,
தில்லுதுரயின் கம்பெனி வனப்பாதைகளில் வாகனங்கள் செல்லும் வழிகளில், மிருகங்கள் நடமாட்டம் குறித்து சைன் போர்டுகள் வைப்பதாக உறுதி கொடுத்திருந்தது.

அதேபோல், அந்நிறுவனத்தின் ஊழியர்கள் வழியெங்கும் ஆங்காங்கே போர்டுகளை நட்டுக் கொண்டிருந்தனர்.

தில்லுதுரயும் அவர் நண்பரும் மலைப்பாதையில் மான் நடமாட்டம் குறித்து ஒரு போர்டை நட்டுக் கொண்டிருந்தனர்.

'காட்டில் வேலை செய்கிறோம், ஆனால் காட்டு விலங்குகள் ஒன்றைக்கூட கண்ணில் பார்க்கவில்லையே..' என்று பேசிக்கொண்டே போர்டை நடத் துவங்கினார்கள்.

போர்டை நட்டு முடித்ததும், தில்லுதுர சற்று பின்னால் சென்று போர்டை கவனித்தார்.
 
"மான் நடமாட்டம் நிறைந்த பகுதி. வேகம் குறைத்துச் செல்லவும்..." என எழுதி ஒரு அழகான மான் தாவுவதுபோல படம் போட்டு அம்சமாய் இருந்தது போர்டு.

திருப்தியுடன் அடுத்த போர்டை நடுவதற்காக சற்று தூரம் தள்ளிப் போய் குழியை தோண்ட ஆரம்பித்தார்கள்.

கொஞ்ச நேரம் இருக்கும்.

ஏதோ ஒரு சப்தம் கேட்டுத் பின்னால் திரும்பிய தில்லுதுர, ஒரு அழகான மான் துள்ளி சாலையின் குறுக்கே ஓடுவதை கவனித்தார்.

அதையே பார்த்துக் கொண்டிருந்த தில்லுதுர, நண்பரிடம் திரும்பி ஆச்சர்யத்துடன் சொன்னார்.

"எவ்வளவு அறிவான மான் பார்த்தியா.? எவ்வளவு பாதுகாப்பாய் இருக்கு அது.? நாம போர்டு நட்டு வைக்கற வரைக்கும் காத்திருந்து, இப்ப நட்ட உடனே ரோட்டை க்ராஸ் பண்ணுது..!".
.
.
.

11 comments:

Unknown said...

:)))))))))))) AYOO AYOO

கோவை நேரம் said...

தில்லுதுர...நீங்க கலக்குற...

செல்வா said...

ஹா ஹா.. பயங்கர அறிவாளி மான் அண்ணா அது ..

Nanjil Kannan said...

அருமை :))))))))

நடராஜன் said...

Is t the same man who owns tat egg shop??

Yoga.s.FR said...

)))))))))))))))))!!!!!!!!!!!hahahaaaaaaa!!!!!

உமா கிருஷ்ணமூர்த்தி said...

தில்லுதுர மேம்போக்காக சிரிப்பை வரவழைத்தாலும் சிந்திக்கவும் வைக்கிறார்.ஏனென்றால் இது போன்று தன்னால் தான் இந்த காரியம் ஆயிற்று என்று பேசுபவர்களை இன்றளவும் கண்டு கொண்டுதான் வருகின்றேன்.யதார்த்த மனிதர்களின் பிரதிபலிப்பாக இருக்கிறது இன்றைய பதிவு.

இராம்குமார் said...

எப்படி இப்படி எல்லாம் ச்சச்ச்ச்ஸ் ப்ப்ப்பப்ப்ப்ப பா ......

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமை

எஸ்.கே said...

தங்கள் கதையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_16.html

Elamurugan said...

10 நாளா பதிவே இல்ல?

Post a Comment