Monday, March 7, 2011

டேனியும் யானையும்


அன்று காலையில் சென்னை வந்திருந்தோம்.

கணவருடன் காஞ்சிபுரம் போவதாய் ஏற்பாடு.

சென்னையில் இருந்து கிடத்தட்ட இரண்டு மணி நேரப் பயணம்.

டேனி சந்தோஷத்தில் அவன் அப்பாவுடன் என்னென்னவோ பேசிக் கொண்டு வந்தான்.

நான்கு வயதுக் குழந்தைக்கு எதைப் பார்த்தாலும் ஆச்சர்யம்தானே..?.

கோவிலுக்கு வந்து, சுற்றும் முற்றும் என்ன பொம்மைகள் வாங்க வேண்டுமென்று முதலிலேயே லிஸ்ட் போட்டு விட்டான்.

உள்ளே நுழையும்போது, அழகான இரண்டு கோயில் யானைகள் அருமையான அலங்காரத்துடன் நின்று கொண்டிருந்தன.

வருகிறவர்கள் அதற்கு தின்னவோ, பைசாவோ கொடுக்க வாங்கிக் கொண்டு அது சந்தோசமாய் அவர்களை ஆசிர்வாதம் பண்ணிக் கொண்டிருந்தது.

பொதுவாய் யானை, குதிரை என்றால் சந்தோசமாய்ப் பார்க்கும் டேனியை, ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தைக் கொடுத்து யானையிடம் ஆசிர்வாதம் வாங்க அழைத்துப் போனேன் நான்.

அவனோ வர மறுத்து அழ ஆரம்பிக்க, அவன் அப்பா, "விடு.. அவன் பயப்படறான்னா எதுக்கு கூட்டிட்டு போற..?" என்று தடுத்து விட்டார்.

இருந்தாலும், அவன் பயந்தவனோ என லேசாய் அவர் யோசிப்பது தெரிந்தது.

எனக்கோ, அவன் ரெண்டு மாதம் முன்பு பேரூர் கோவிலில் யானையிடம் சந்தோஷமாய் ஆசிர்வாதம் வாங்கியது நினைவுக்கு வர, அதை என் கணவரிடம் சொன்னேன்.

என் கணவர், மெல்ல அவனிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்.

"டேனி யானைன்னா உனக்கு பயமா..?".

அவன் சிரித்தபடி சொன்னான்.

"இல்லியே..!".

அவர் தொடர்ந்தார், "அப்ப... முன்னால யானைகிட்ட போவியாமே, இப்ப ஏன் யானைகிட்ட போக மாட்டேனுட்டே..?".

கொஞ்சம் யோசித்த டேனி சொன்னான்.

"அதுவா.. கோயில்ல இருக்கற யானை எல்லாம் காசு வாங்கிட்டு தலைல குட்டி வச்சிடுதுப்பா..!".
.
.
.

6 comments:

Nanjil Kannan said...

ha ha ha :)))))))))))))))))

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

மீன்ஸ் படத்துல இருக்கறது உங்க பையனா?

Unknown said...

தலைல குட்டி வச்சிடுதுப்பா..!". :)))))))))))))))))))))))

வடுவூர் குமார் said...

இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே கோவில் யானை கூட்டத்தை பார்த்து தும்பிக்கையால் ஒரு விசிறு போட்டது பாருங்கள் பாதி பேர் துண்டை காணும் துணியை காணும் என்று பறந்துவிட்டார்கள்.

துளசி கோபால் said...

ஹாஹாஹாஹா

டேனி, துளசிதளம் யானைகளைப் பார்த்தா பயமா இருக்காதே! அஞ்சு பேரும் குட்ட மாட்டாங்க. காசை தைரியமா என் கையில் கொடுக்கலாம்:-)))))

இராம்குமார் said...

elephant has an 40000 muscles in its trunk. deni ku thane theriyum andha weight.

Post a Comment