தில்லுதுரயின் பையன் '101 டால்மேஷன் ' படம் பார்த்துவிட்டு வந்ததும் அதேபோல் எனக்கும் ஒரு நாய் வேண்டும் என்று ரகளை பண்ண ஆரம்பித்துவிட்டான்.
வெள்ளை உடலில் கருப்பு புள்ளிகளுடன் இருக்குமே, அதுதான் டால்மேஷன்.
அந்தப் படம் 101 டால்மேஷன் நாய்களைப் பற்றிய கதை என்பதால், தில்லுதுரயின் பையன் ரொம்பவே இம்ப்ரஸ் ஆகி.. 'நாய் உடனே வீட்டுக்கு வந்தால்தான் ஆச்சு' என்று ஒற்றைக் காலில் நின்றான்.
தில்லுதுரயும் ஒவ்வொரு பெட் ஷாப்பாய் அழைந்து கடைசியில், ஒரு குட்டியைப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டார்.
ஓரளவு பெரிய குட்டி என்பதால், விலையும் கொஞ்சம் அதிகம்தான்.
ஆனால், மகன் கேட்டதாயிற்றே...!
நாய்க்குட்டி நன்றாகத்தான் வளர்ந்துவந்தது.
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழிந்ததும்தான் பிரச்சினை ஆரம்பித்தது.
நாய் ஏதோ வியாதி கண்டு, சினிமா ஹீரோபோல் ரத்தரத்தமாய் வாந்தி எடுக்க ஆரம்பித்தது.
என்னென்ன வெட்னரி டாக்டர் எங்கெங்கே இருக்கிறார்களோ, அங்கெல்லாம் போய்க் காட்டியாகிவிட்டது.
நாய் தேறிய பாட்டைக் காணோம்... பத்தாதற்கு வியாதி இன்னும் முற்றிக் கொண்டே போனது.
பையனின் அழுகை தாங்காமல், இன்னும் புதிய டாக்டர்களைத் தேடி அழையும் போதுதான் தில்லுதுரைக்கு நண்பர் ராஜாவின் ஞாபகம் வந்தது.
ஒருமுறை, அவர் வீட்டு நாய்க்கும் இதேபோல் பிரச்சினை என்று சொன்னது ஞாபகம் வந்ததும்... உடனே அவருக்கு போன் செய்து கேட்டார்.
"அந்த வியாதிக்கு உன் நாய்க்கு என்ன மருந்து கொடுத்தே ராஜா..?".
ராஜா மறுமுனையில் சொன்னார்.
"டர்பன்டைன் கொடுத்தேன்..!".
தில்லுதுர உடனே உற்சாகமாய் 'நன்றி' சொல்லிவிட்டு, கடைவீதி போய் தேடித் தேடி டர்பன்டைன் வாங்கி வந்து நாய்க்குக் கொடுக்க ஆரம்பித்தார்.
ரெண்டே நாள்... டால்மேஷனின் நிலைமை இன்னும் மோசமாகி இறந்தேபோய் விட்டது.
ரொம்பவும் சோகத்துடன் மறுபடி ராஜாவுக்கு போன் செய்தார் தில்லுதுர.
"ராஜா... நீ சொன்னபடி நாய்க்கு டர்பன்டைன் கொடுத்தேன். ஆனாலும், நாய் ரெக்கவர் ஆகல... செத்துப் போச்சு..!".
தில்லுதுர சொன்னதும் மறுமுனையில் ராஜா கூலாய்ச் சொன்னார்.
"ஆமா நண்பா... என் நாய்கூட செத்துப் போச்சு..!".
.
.
.
3 comments:
சஸ்பென்ஸ்,த்ரில் கலந்த நல்ல காமெடி :))))))))
டர்பன்டைன்... அச்சா.. அச்சா..!
தில்லுதுர டாக்ஸியும் இந்தப் பதிவும்
'கொல்'லெனச் சிரிக்க வைக்கும் ரகம்.
உங்களை டீச்சராய்ப் பெற்றிருக்கும் மாணவர்கள்
கொடுத்து வைத்தவர்கள் :)
Post a Comment