Tuesday, November 9, 2010

மாமியாரின் ஆசை

இது எப்போதும் எங்கள் வீட்டில் நடப்பதுதான்.

என் கணவர், அவருடைய அம்மாவை நான் எப்போதுமே சரியாக கவனிக்கவில்லை என்று குற்றம் சொல்லிக் கொண்டேதான் இருப்பார்.

கணவர் வெளியூரில் இருக்க, பள்ளிக்குச் செல்லும் குழந்தையை வைத்துக் கொண்டு, ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்தபடி, என்னால் மாமியாரை எவ்வளவு கவனிக்க முடியுமோ அதற்கும் மேலேதான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனாலும், இந்தப் பிரச்சினை அடிக்கடி வந்தபடியேதான் இருக்கும்.

மனதார எந்தத் தவறும் என்மேல் இல்லாதபோது, அவர் குற்றம் சொல்லி... அதை நான் ஒத்துக் கொள்ள மறுக்கும்போது பிரச்சினை முற்றி சண்டையில் முடிவது போல்தான் அன்றும் நடந்தது.

சண்டையின் இடையே என் கணவர் கோபத்துடன் சொன்னார்.

"எல்லாம் என்னோட தப்புடி. 'படிச்ச பொண்ணக் கட்டிக்காத... படிச்ச பொண்ணக் கட்டிக்காத'னு என் அப்பா தலையால தண்ணி குடிச்சாரு. நாந்தான் உன்னையே கட்டிக்குவேன்னு சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்ப அவஸ்தைப் படறேன்..!".

நானும் மிதமிஞ்சிய கோபத்தில் கண்ணீருடன் சொன்னேன்.

"நானும்தான்... என் அம்மா 'இந்த சம்பந்தம் வேண்டாம்'னு சொன்னப்ப அவங்க சொல்பேச்சு கேட்டிருந்தாக்கூட நான் இப்ப இவ்வளோ கஷ்டப்பட வேண்டியதில்லையே..!".

கோபத்தில் நான் சடாரென்று உண்மையை உளறியதும், அதுவரை சத்தம் போட்டுக் கத்திக் கொண்டிருந்த என் கணவர் சட்டென்று அமைதியாகிப் போனார்.

முகமெல்லாம் ஒரு மாதிரி மாறிப்போய், யோசித்தபடியே திரும்பிய அவர் ஒருவாறு சமாளித்துக் கொண்டு கேட்டார்.

"என்ன சொன்ன... உன் அம்மா நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு நினைச்சாங்களா..?".

எனக்கிருந்த கோபத்தில் அப்போதும் என்ன செய்கிறேன் என்பது கூட உறைக்காமல் ஆவேசமாய், 'ஆமாம்..!' என்று தலையாட்டினேன்.

மெல்லிய யோசனையுடன் திரும்பியவர் சொன்னார்.

"எப்பேர்ப்பட்ட பொம்பள உன் அம்மா.." என்றவர் தொடர்ந்து கிண்டலாய்ச் சொன்னார்.

"எவ்வளவு நல்லெண்ணம் அவங்களுக்கு ... நான் நல்லா இருக்கணும்னு எவ்ளோ ஆசைப்பட்டிருக்காங்க... அவங்களப் போயி நான் தப்பா நெனச்சுட்டேனே..!".
.
.
.

10 comments:

எல் கே said...

ஹஹஹா

பார்த்திபன் நாகராஜன் said...

நூற்றி எழுபத்தியைந்தாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பா ...

Kesavan said...

GOOD ONE

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)
இது நிஜம்மா ந்டந்ததா..?

ரப்பர் பூக்கள் (ரா.இளங்கோவன்) said...

அற்புதம்..ஹா ஹா

இளங்கோவன், சென்னை

Radhakrishnan said...

ஹா ஹா!

// முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…
:)
இது நிஜம்மா ந்டந்ததா..? //

நடக்கவே கூடாது அப்படின்னு எதுவும் இல்லையே ;)

மங்களூர் சிவா said...

haa haa
ROTFL
:))))

shortfilmindia.com said...

நைஸ்...
கேபிள் சங்கர்

Unknown said...

எவ்வளவு நல்ல மாமியார்.?
இப்படி ஒரு மாமியார் இருந்திருந்தா நானும் பொழச்சிருப்பேன்...!

Rajasubramanian S said...

நடப்பது நடந்தே தீரும்! விதியை யாரால் மாற்றமுடியும்!

Post a Comment