Monday, February 6, 2012

டேனியும் பில்கேட்ஸும்

ன்னிக்கு வெள்ளிக்கிழமை எந்திரிச்சதே லேட்டு.

இதுல இன்னிக்கு டேனிக்கு கம்ப்யூட்டர் கிளாஸ் வேற.!

ஐந்து வயதுக் குழந்தைக்கு எதுக்கு கம்ப்யூட்டர் என்றால் ஸ்கூலும் அவரும் ஒரே மாதிரி தேவைதான் என்று பதில் மட்டும் சொல்கிறார்கள்.

டேனியும் இப்பல்லாம் மானிட்டர், சிபியூ, வின்டோஸ் என்று சில வார்த்தைகள் வேறு சொல்ல ஆரம்பித்ததும் அவன் அப்பாவுக்கு தலைகால் புரியவில்லை.

ஆனால், கம்ப்யூட்டர் கிளாஸ் வரும் நாட்களில் எனக்குத்தான் காலை அவசரங்கள் அதிகமாகிப் போனது.

காலைல எந்திரிச்சு சமைச்சு.. அவனைக் கிளப்பி, எல்லாம் முடியும் போது மணி எட்டே கால்.

எட்டரைக்குள்ளாக அவனை க்ளாசில் விட்டுவிட்டு, என்னைக் காலேஜில் இறக்கி விட்டுவிட்டு, ஒன்பதுக்குள் அலுவலகத்துக்கு போக வேண்டிய கடுப்பில் நின்று கொண்டிருந்தார் அவர்.

வேகவேகமாய் கிளம்பி வந்து பைக்கை ஸ்டார்ட் செய்தால், பைக் ம்ஹூம் என்று சொல்லிவிட்டது.

அவர் கடுப்புடன் பழக்கமாயிருந்த பக்கத்து கால்டாக்ஸிக்கு ஃபோன் செய்தார்.

ஐந்தே நிமிடத்தில் வந்த கால்டாக்ஸியின் ட்ரைவர்கூட தெரிந்தவர் என்றாலும், பட்ட காலிலேயே படும் என்பதுபோல் கிளம்பிய கால்டாக்ஸி பத்து நிமிடம் ஓடிய பின்பு நின்றுவிட்டது.

அலுவலகத்துக்கு லேட்டாகும் கடுப்புடன் என் கணவர் ட்ரைவரைப் பார்த்துக் கேட்டார்.

"என்னங்க... பெட்ரோல் இல்லையா.?".

"இல்லை சார். காலைலதான் டேங்க் ஃபுல் பண்ணினேன்...!" என்றவர் இறங்கிப் போய் பானட்டைத் திறந்து பார்த்துவிட்டு, "எதும் எலக்ட்ரிகல் ப்ராப்ளம் போல இருக்கு சார்..!" என்றார்.

கோபமாய் என் கணவர் ஏதோ சொல்ல வாயெடுத்த அதே விநாடியில் டேனி ட்ரைவரைப் பார்த்துச் சொன்னான்.

"அங்கிள்... எல்லோரும் இறங்கிட்டு வின்டோஸை எல்லாம் சாத்திட்டு... திரும்ப ஏறி வின்டோஸை எல்லாம் ஓப்பன் பண்ணிப் பாருங்க.... வண்டி ஓடும்...!".

சர்வ நிச்சயமாய்ச் சொன்ன அவனை ஒருகணம் ஆச்சர்யத்துடன் பார்த்த என் கணவர் கேட்டார்.

"எப்படிச் சொல்லற.?".

கேட்ட என் கணவரிடம் கண்களை விரித்தபடி டேனி சொன்னான்.

"ஆமாப்பா... க்ளாஸ்ல கம்ப்யூட்டர் ஓடலைனா நாங்க அப்படித்தான் பண்ணுவோம்...!".
.
.
.

7 comments:

Anonymous said...

டைமிங் .. சூப்பர்..  அடுத்த ஓதிவை எதிர்நோக்கி இருக்கிறேன். தில்லுதுர வரணும் 

maithriim said...

அஜித் கருணாஸ் நகைச்சுவை தான் ஞாபகத்துக்கு வருது :) அஜித் கருணாசின் ஆட்டோவின் கண்ணாடியை திருப்பி விட்டு இப்ப வண்டி ஓடும் பாரு என்று சொல்வது போல இந்த குழந்தை விண்டோசை மூடி திறக்கச் சொல்கிறான். அருமையான சிறுகதை. முகத்தில் புன்னகையுடன் இதை எழுதுகிறேன் :)
amas32

sutha said...

Long live Bill Gates !!!

ILA (a) இளா said...

இது சர்தார்ஜி ஜோக்கோட புது versionஆ? ஆனா காலத்துக்கு ஏத்தபடி நச்’னு இருக்கு

jeganjeeva said...

நான் மெஷின் ஓடலேனா கூட பண்ணுற முதல் வேலை "ஸ்விட்ச் ஆப்" அப்புறம் "ஸ்விட்ச் ஆன்". சூப்பர் டைமிங் காமெடி. :)

Vadielan R said...

அசத்தலான நகைச்சுவை டேனி சூப்பர் தம்பி

சத்யா said...

இதை வெறும் நகைச்சுவை பதிவாக என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. இன்றைய குழந்தைகளின் இயற்கையான இயல்பைத் தான் இந்தப் பதிவு கூறுகிறது.

Post a Comment