அது ஐந்தாம் வகுப்புக்கான நீதிபோதனை வகுப்பு.
ஆசிரியை தனது மாணவர்களுக்கு நேற்று கொடுத்திருந்த அசைன்மென்ட் பற்றி கேட்டுக்> கொண்டிருந்தார்.
அது எல்லோரும் தனது பெற்றோரிடம் ஒரு நீதிக்கதையைக் கேட்டு அதை வந்து> வகுப்பில் சொல்ல வேண்டும் என்பதே.>> அதேபோல், எல்லோரும் ஒவ்வொருவராய் வந்து தனது அப்பா அம்மா சொன்ன கதைகளை> சொல்லத் துவங்கினர்.
எல்லாம், வழக்கமான கெடுவான் கேடு நினைப்பான், ஏமாற்றாதே ஏமாறாதே வகைக் கதைகளே.
கிட்டத்தட்ட ஆசிரியை அலுத்துப் போகும்போது, தில்லுதுரயைன் மகன் எழுந்து வந்தான்.
ஆசிரியை அவனிடம் ஆவலுடன் கேட்டார்.
"தம்பி... நீ எதுவும் கதை சொல்லப் போறியா?".
அவன் ஆர்வத்துடன் பதில் சொன்னான்.
"ஆமா மிஸ். எங்க அம்மா சொன்னாங்க. எங்க அப்பாவைப் பத்தின கதை!".
சுத்தமாய் அலுத்துப் போயிருந்த ஆசிரியை, சட்டென்று ஆர்வம் கண்ணில் மின்ன கேட்டார்.
அவன் ஆர்வமாய் சொல்ல ஆரம்பித்தான்.
"மிஸ்... எங்கப்பா பேரு தில்லுதுர. இது அவர் மிலிட்டரில வேலை பார்க்கும்போது நடந்தது. அவர் ஒரு சமயம் பாகிஸ்தான் பார்டர்ல போயிட்டருந்தப்ப அவர் ப்ளேனை எதிரிகள் சுட்டு விழுக வச்சிட்டாங்க. அப்ப, எங்கப்பா டக்குனு பாராசூட்ல வெளிய குதிச்சுட்டாரு. குதிக்கும்போது அவர் கையில ஒரு பாட்டில் விஸ்கி, ஒரு துப்பாக்கி, ஒரு கத்தி மட்டும்தான் இருந்ததாம். குதிச்ச இடமோ எதிரிகள் மத்தியில. எங்கப்பா மேல இருந்து எறங்க எறங்கவே கையில இருந்த விஸ்கிய மொத்தமும் தொறந்து குடிச்சுட்டாராம்."
ஆசிரியை மட்டுமல்ல, வகுப்பே தில்லுதுர இப்ப என்ன செஞ்சிருப்பாருனு ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தது. பையன் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான்.
"கீழே எறங்கின எங்க அப்பாவை எதிரிகள் 75 பேரு சுத்திக்கிட்டாங்க. எங்கப்பா மொதல்ல துப்பாக்கில இருந்த புல்லட் தீருற வரைக்கும் 40 பேரை சுட்டுக் கொன்னுட்டு, அடுத்த 20 பேரை கத்தி ஒடயற வரைக்கும் குத்திக் கொன்னாராம். மீதி இருந்த 15 பேரையும் வெறும் கையாலயே அடிச்சுக் கொன்னுட்டு வந்த எங்கப்பாவுக்கு அரசாங்கமே பரம்வீர்சக்ரா அவார்ட் கொடுத்துச்சாம்!".
அவன் சொல்லி முடித்ததும் வகுப்பே வியப்புடன் அவனைப் பார்க்க, ஆசிரியை மட்டும் அதிர்ச்சியுடன் அவனிடம் கேட்டார்.
"இந்தக் கதைல உங்க அம்மா உனக்குச் சொன்ன நீதி என்ன? ".
ஆசிரியை கேட்டதும் அவன் எந்த சலனமும் இல்லாமல் சொன்னான்.
"அப்பா குடிச்சிருக்கும் போது யாரும் அவர் பக்கத்துல போகக் கூடாது..!".
.
.
.
Showing posts with label குழந்தை. Show all posts

Monday, January 30, 2012
Friday, December 24, 2010
கிறிஸ்துவும் மூன்று மரங்களும்
ஒருகாலத்தில், மலை ஒன்றின் மீது மூன்று இளம் மரங்கள் நின்றன.
அவை, எதிர்காலத்தில் தாங்கள் வளர்ந்து பெரியவை ஆனதும், தாங்கள் அடைய விரும்பும் நிலை பற்றி கனவு கண்டுகொண்டிருந்தன.
முதலாவது மரம், “நான் உலகின் விலையுயர்ந்த பொக்கிஷத்தைச் சுமக்கவிரும்புகிறேன்.. ” என்றது.
இரண்டாவது மரம், “நான் மாபெரும் சமுத்திரங்களைக் கடக்கப் போகின்றேன். பேரரசர்களையெல்லாம் தாங்கிச் செல்வேன். உலகிலேயே அதிபலம் பொருந்திய மரக்கலமாக நான் இருப்பேன்,” என்றது.
மூன்றாவது மரமோ, “நான் இம்மலை உச்சியை விட்டுப் போகப்போவதே இல்லை. நான் மிகவும் உயரமாக வளர விரும்புகிறேன். அப்போது, என்னைப் பார்க்கும் மக்கள், சுவர்க்கத்திற்கு உயரே தங்கள் கண்களை உயர்த்தி கடவுளைப் பற்றி நினைப்பார்கள். உலகிலேயே மிக உயர்ந்த மரமாக நானே இருப்பேன்,” என்றது.
வருடங்கள் பல சென்றன. அந்த சிறிய மரங்களும் உயரமாக வளர்ந்தன. ஒரு நாள், மூன்று விறகுவெட்டிகள் அந்த மலை மீது ஏறினர்.
அவர்கள் ஆளுக்கொரு மரத்தை வெட்டிச் சாய்த்து, தங்கள் வண்டியில் மரங்களை நகரத்துக்குள் எடுத்துச் சென்றனர்
தன்னை விறகுவெட்டி தச்சு வேலை செய்யுமிடத்திற்குத் தன்னை கொண்டு வந்தபோது மிகவும் களிப்படைந்தது. ஆனால், அந்த தச்சன் அதை மிருகங்களுக்கு தீனிவைக்கும் கொட்டில் தொட்டியாக அதை வடிவமைத்தான்.
ஒரு காலத்தில் மிகவும் அழகு வாய்ந்த அந்த மரம், பொன்னால் இழைக்கப்படவில்லை, பொக்கிஷங்களையும் தாங்கி நிற்கவில்லை. அது மரத்தூள்களால் தூசுபடிந்தும் பசியோடிருக்கும் பண்ணை மிருகங்களுக்குத் தீனி தாங்கி நின்றது.
இரண்டாவது மரம், தன்னை விறகுவெட்டி ஒரு கப்பல் கட்டுமிடத்திற்குக் கொண்டு சென்றவுடன் மிகுந்த உற்சாகமடைந்தது. ஆனால், அது நினைத்தற்கு மாறாக, ஒரு சிறிய மீன்பிடி படகாக செய்யப்பட்டது. சமுத்திரத்தில் செல்ல முடியாத அளவிற்கு அது வலிமையற்றதாக இருந்தது. ஏன், ஒரு சிறிய ஆற்றில் கூட அதனால் பயணம் செய்ய முடியாமல், ஒரு சிறிய ஏரிக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
மூன்றாவது மரமோ, தன்னை வெறும் கட்டைகளாக வெட்டி மரக்கொட்டில் ஒன்றில் போட்டு வைத்தபோது, தான் விரும்பியது நடக்காமல் மனம் வருந்திக் கிடந்தது..
பல நாட்களும் இரவுகளும் கடந்தன. அந்த மூன்று மரங்களும் தாங்கள் கண்டு வந்த கனவுகளையெல்லாம் மறந்து விட்டிருந்தன.
ஆனால் ஒரிரவு ஒரு இளம் பெண், தான் அப்போதுதான் ஈன்றெடுத்த தனது குழந்தையை அத்தொட்டிலில் இட்டபோது அந்த முதல் மரத்தின் மீது நட்சத்திர ஒளிவெள்ளம் பாய்ந்தது.
“அவனுக்கு ஒரு தொட்டில் என்னால் செய்ய முடிந்தால்...,” என அப்பெண்ணின் கணவன் முணுமுணுத்தான்.
அந்த இளம் தாய், அவனது கைகளைப் பிடித்து புன்னகைத்தாள். அந்த மரத்தொட்டிலின் மீது விண்மீன்களின் ஒளி பாய்ந்துகொண்டிருந்தது. “இந்த மரத்தொட்டில் மிகவும் அழகாக இருக்கின்றது,” என்றாள்.
அப்போது அந்த மரம், தான் உலகிலேயே அதி உயரிய பொக்கிஷத்தைத் தாங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தது.
இன்னும் சில நாள் கழித்து, ஒரு சாயங்காலம், மிகவும் களைப்படைந்த ஒரு வழிப்போக்கனும் அவனது நண்பர்களும் அந்த சிறிய படகில் செல்லும்போது, இடியும் மின்னலும் கொண்ட புயல் ஆரம்பித்தது.
அந்த சிறிய மரம் நடுங்கியது. .
களைப்படைந்த அந்த வழிப்போக்கன் எழுந்து உட்கார்ந்தான். பிறகு எழுந்து நின்று, தனது கைகளை நீட்டி, “அமைதி,” எனக் கூறியதும், புயல் ஆரம்பித்த வேகத்திலேயே ஓய்ந்தது.
அந்தப் படகு அப்போது, சுவர்க்கத்திற்கும் பூவுலகிற்கும் அரசராக விளங்கியவரைத் தான் சுமந்துசெல்வதை உணர்ந்தது.
ஒரு வெள்ளிக் கிழமை காலை வேளை, தன்னைப் போட்டு, மறந்துவிட்டிருந்த இடத்திலிருந்து தான் அகற்றப்பட்டபோது மூன்றாவது மரம் திடுக்கிட்டது.
மிகவும் ஆக்ரோஷமாக கத்திக்கொண்டிருந்த ஒரு கூட்டத்தின் நடுவே தான் தூக்கிச் செல்லப்பட்ட போது அந்த மரம் படபடத்தது. ஒரு மனிதனின் கரங்களை தன் மீது வைத்து ஆணியால் அடித்தபோது அந்த மரம் நடுநடுங்கியது.
ஆனால், ஞாயிறின் காலையில், சூரியன் உதித்தபோது உலகமே களிப்புணர்வால் தனக்குக் கீழே அதிர்ந்தபோது, இறைவனின் அன்பு யாவற்றையும் மாற்றிவிட்டது என அம்மரம் உணர்ந்தது. அது அந்த மரத்தை உறுதிப்படுத்தியது.
அந்த மூன்றாவது மரத்தைப் பற்றி மக்கள் நினைத்த போதெல்லாம், கடவுளின் ஞாபகம் தான் அவர்களுக்கு வந்தது. உலகிலேயே உயர்ந்த மரமாக இருப்பதை விட, அது அதிசிறப்பான ஒன்றாக இருந்தது.
.
.
.
இளமையில் உங்கள் எண்ணம் எதுவோ, அதை அடைய பொறுமையுடன் காத்திருந்தால்...
அது கிடைக்காமல் போகாது என்பதற்கு இந்த மூன்று மரங்கள், மக்களுக்கு உலகம் உள்ள வரையும் சாட்சியாய் இருந்தது.

Labels:
கட்டை,
கிறிஸ்து,
குழந்தை,
தச்சு,
தொட்டில்,
பேரரசர்,
விறகுவெட்டி
5
comments
Tuesday, November 2, 2010
சகிக்கமுடியாத மனைவி
தன் மனைவிக்கு நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் டாக்டரைப் பார்க்க அழைத்துப் போனார் தில்லுதுர.
சற்று கவனிக்க வேண்டிய நிலையில் தில்லுதுரயின் மனைவி இருந்ததால், டாக்டர் சிலபல செக்கப்களை செய்யச் சொன்னார்.
எல்லாவற்றையும் முடித்து வந்ததும் ரிப்போர்ட்களைப் பார்த்த டாக்டர், தில்லுதுரயிடம் அவர் மனைவியின் நிலை குறித்துக் கேட்டார்.
"என்ன உங்க வொய்ஃப் இப்படி இருக்காங்க..? பார்க்கவே சகிக்கலை...!".
டாக்டர் கேட்டதும், தில்லுதுர தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சொன்னார்.
"ஆமா டாக்டர். என்னாலயும்தான் சகிச்சுக்க முடியல. என்ன பண்ணறது..? ஆனா, நல்லா சமைப்பா டாக்டர். அதுவுமில்லாம என் குழந்தைகளுக்கும் அவள்னா உயிரு...!" என்றார்.

உடல்நிலை,
குழந்தை,
டாக்டர்,
மனைவி,
ரிப்போர்ட்,
வொய்ஃப்
4
comments
Monday, August 16, 2010
ஆண் என்ன பெண் என்ன...?
நீலிமா என்னுடன் வேலை பார்க்கும் மற்றொரு ஆசிரியை.
இன்னும் சொன்னால் எனக்கு மிக நெருங்கிய தோழி.
அவள் மிகச் சமீபமாய் குழந்தைப் பேறு அடைய இருக்கிறாள்.
நாட்கள் நெருங்கி வரவர அது பெண் குழந்தையாய் இருக்குமோவென்று அவளுக்கு பயம் அதிகமாகிக் கொண்டே வந்தது.
பெண் குழந்தை மீது அவளுக்கு ஒன்றும் வெறுப்பு இல்லை என்றாலும், அதை வேண்டாம் என்பதற்கு ஒரு ஆச்சர்யமான காரணம் இருந்தது அவளிடம்.
நீலிமாவின் வீட்டில் யாருக்கும் ஆண் குழந்தை பிறந்ததே இல்லை என்பதுதான் அது.
அவளுடன் பிறந்தவர்கள் இருவரும் பெண்கள்.
அவள் அம்மாவுக்கும் உடன் பிறந்த நான்கும் பெண்கள்.
அவள் பாட்டிக்கும் பாட்டியின் அம்மாவிற்கும் உடன் பிறந்தது எல்லாம் பெண்கள் என அவர்கள் வீட்டில் எல்லோருக்கும் பெண்களாய்ப் பிறந்து வந்ததுதான் அந்தப் பரம்பரை சோகம்.
இது பழைய கதை என்றால், சமீபமாய்த் திருமணமான நீலிமாவின் அக்கா இருவருக்கும் சொல்லி வைத்தது போல் ஆளுக்கு இரண்டு பெண் குழந்தைகளே.
எனவே... நீலிமா தனக்கு ஆண்குழந்தை பிறக்க வேண்டும் என ஆசைப்பட ஆரம்பித்தாள்.
முதலில் சாதரண ஆசையாய்த் தெரிந்த இது பின்னர் வளர்ந்து வளர்ந்து வெறியாய் மாற ஆரம்பித்துவிட்டது.
கடைசி கடைசியாய்... பெண் குழந்தை இவள் ஏற்றுக்கொள்ள மாட்டாளோ என பயப்படும் அளவுக்கு அவளது ஆண்குழந்தைப் பித்து தலைக்கேறிப்போய்க் கிடந்தது.
அன்றும் அப்படித்தான் நீலிமா வேலைக்கு வந்து கொஞ்ச நேரத்தில் அவளுக்கு பிரசவ வலி வந்துவிட்டது.
ஆம்புலன்ஸ் வந்து கிளம்பும்வரை என் கையைப் பிடித்துக் கொண்டு 'பையனாப் பிறக்கணும்னு கும்பிட்டுக்கடி...!' என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்.
எனக்கும் என்னவோ... அவளுக்கு பையனே பிறக்க வேண்டும் என்று தோன்றியது.
நீலிமா கிளம்பிப்போன அன்று பூராவும் அவளுக்கு பிரசவம் ஆகவில்லை.
கணவர் வராததால், அவளைப் போய்ப் பார்க்கவும் முடியவில்லை.
மறுநாள், காலையில் சமையல்.. பையனை கிளம்ப வைத்து, அவரை வேலைக்கு அனுப்பி, காலேஜ் உள்ளே நுழைந்ததிலிருந்து விடாமல் க்ளாஸ் என இருந்ததால் நீலிமாவைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
கிட்டத்தட்ட ஒரு மணி... லன்ச் சமயத்தில் ரெஸ்ட் ரூம் வந்து செல்போனை எடுத்தால், நீலிமாவின் போனில் இருந்து நாலைந்து மிஸ்டு கால் வந்திருந்தது.
ஒரு குற்ற உணர்ச்சியுடனும், அவளுக்கு ஆண் குழந்தையே பிறந்திருக்க வேண்டும் என்ற ஆர்வத்துடனும் நீலிமாவிற்கு போன் செய்தேன்.
மறுமுனையில் அவள்தான் எடுத்தாள்.
காலை மூன்றரை மணிக்கே பிரசவம் ஆகிவிட்டதாம்... சுகப் பிரசவம்.
கொஞ்சம் பயத்துடனே என்ன குழந்தை என்று கேட்டேன்.
"ஏய்டி இவளே... நீ கும்பிட்டது வீண்போகலைடி. எங்க வம்சத்துலயே இல்லாம எனக்கு பையனே பொறந்துட்டாண்டி....! அம்மா அப்பா அக்கா அக்கா வீட்டுக்காரரு எல்லாருக்கும் ஆச்சர்யமோ ஆச்சர்யம்...! எல்லாரும் குழந்தைய கையில தூக்கிட்டே அலையறாங்க. கீழ வைக்கலேன்னா பாத்துக்கோயேன்".
மிகுந்த சந்தோசத்துடன் அவள் பேசப் பேச நான் ஆர்வத்துடன் கேட்டேன்.
"ஆமா... பையன் யாரு மாதிரி இருக்கான்..? அப்பா மாதிரியா, இல்லை உன்னை மாதிரியா...?".
நீலிமா இன்னும் அந்தச் சந்தோசம் மாறாத குரலில் சொன்னாள்.
"தெரியலடி... மூஞ்சியை யாரு பார்த்தா...?".

Wednesday, April 14, 2010
கன்னத்தில் முத்தமிட்டால்...
அது ஒரு அடர்ந்த காடு.
அதில் உள்ள ஒரு மரத்தில் ஏற ஒரு குட்டி ஆமை விடாமல் முயன்று கொண்டிருந்தது.
கொஞ்சம் முயற்சிக்கு அப்புறம் அது மரத்தில் ஏறியும் விட்டது.
ஏறி ஏறி மரத்தின் உச்சிக்குச் சென்ற அந்த ஆமை பறக்க முயற்சித்து... தன் முன்னிரு கால்களையும் ஆட்டியபடி கீழே குதித்தது.
குதித்த ஆமை பறக்க முடியாமல் கீழே விழுந்தது.
சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும்
அதே போல ஏறி,
அதே போல பறக்க முயற்சித்து,
அதே போல கீழே விழுந்தது அந்த ஆமை.
மேலும் மேலும் இதுவே தொடர்வதையும் அந்த ஆமை மறுபடி மறுபடி தோற்றுப் போவதையும் மரத்தில் இருந்த இரு பறவைகள் கவலையுடன் கவனித்துக் கொண்டே இருந்தன.
கடைசியாய் அந்த பெண் பறவை தன் அருகில் அமர்ந்திருந்த ஆண் பறவை பக்கம் திரும்பி கவலையுடன் சொன்னது.
"என்னங்க... அவன் நம்ம கொழந்தை இல்லைங்கறதையும்... நாம அவனத் தத்து எடுத்திருக்கிறோம்ங்கற உண்மையையும் சொல்ல வேண்டிய நேரம் வந்திருச்சிண்ணு நினைக்கிறேன்...!".
.
.
.
Labels:
ஆமை. ஆண்பறவை,
கிளை,
குழந்தை,
தத்து,
பறத்தல்,
பெண்பறவை,
மரம்,
முத்தம்
3
comments
Thursday, April 8, 2010
காயின் கலெக்சன்
அன்றைய தினம் விடியும்போதே மிகுந்த சோதனையுடன் விடிந்தது.
என் நான்கு வயது மகள் ஒரு 'ஒரு ரூபாய்' காயினை விழுங்கிவிட்டாள்.
எங்கேயோ கீழே கிடந்திருக்கும் போலிருக்கிறது.
காலை விடிந்ததிலிருந்து போனில் ஒவ்வொரு டாக்டராய்த் தேடி அலைகிறேன்... ஒருவரும் மாட்டவில்லை.
பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் அவரவருக்குத் தெரிந்த வைத்தியங்களை ட்ரை செய்து கொண்டிருந்தார்கள்.
ஹாஸ்பிட்டலில் முதலுதவிக்கு போகலாம் என்றால் குழந்தைக்கோ எதுவும் பேசவராமல், எதையும் விழுங்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
கடைசியில் ஹாஸ்பிட்டலுக்கே கொண்டு போகலாம் என்று ஆட்டோ தேடி ரோட்டிற்கு ஓடி வந்த வேகத்தைப் பார்த்து ரோட்டில் சென்று கொண்டிருந்த ஒருவர் விஷயத்தைக் கேட்க நான் சொன்னேன்.
"கொஞ்சம் இருங்கள்... பார்க்கலாம்..." என்று உடனே உள்ளே வந்த அவர், குழந்தையைத் தூக்கி தலைகீழாய்ப் பிடித்து கழுத்தின் பின்புறம் தட்ட அந்த காயின் டொக்கென்று வெளியே வந்து விழுந்தது.
மிகுந்த ஆச்சர்யத்துடன் "நீங்கள் டாக்டரா... எந்த ஹாஸ்பிட்டலில் வேலை செய்கிறீர்கள்..?" என்று நான் கேட்டதும் அவர் பதில் சொன்னார்.
"இல்லை... நான் இன்கம் டாக்ஸ் அலுவலகத்தில் வேலை செய்கிறேன்...!".
.
.
.
Labels:
அலுவலகம்,
ஆட்டோ,
இன்கம்டாக்ஸ்,
கலெக்சன்,
காயின்,
குழந்தை
0
comments
Subscribe to:
Posts (Atom)