Showing posts with label முத்தம். Show all posts
Showing posts with label முத்தம். Show all posts

Thursday, April 7, 2011

அசிங்கமான மனைவி






தில்லுதுர வாழ்க்கையில் கடினமாகப் போராடிக் கொண்டிருந்த நேரம்.

எங்கு தேடினாலும் வேலை கிடைக்கவில்லை.

வேலை இல்லாததால் வருமானம் இன்றிப்போக, திருமணமும் தள்ளிக்கொண்டே போனது.

அவருக்கு உறவில் யாரும் பெண் கொடுக்கவும் தயாராயில்லை.

திருமண வயது தாண்டிக் கொண்டிருந்தது பற்றிய கவலையில் சுற்றிக் கொண்டிருக்கும்போது தான் தில்லுதுர ஒரு தினசரியில் அந்த விளம்பரத்தைப் பார்த்தார்.

ஒரு நல்ல பணக்காரப் பெண்ணுக்கு ஏற்ற வரன் கேட்டு வந்திருந்தது அந்த விளம்பரம்.

போய்ப் பார்த்தால், அந்தப் பெண்ணோ பார்க்கச் சகிக்க முடியாத அவலட்சணமாயிருந்தாள்.

'எவ்வளவு கோடி கொடுத்தாலும் வேண்டாம்..' என்று பெண்பார்க்க வந்தவன் எல்லாம் தெறித்து ஓடிக் கொண்டிருக்கிறான்.

வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டுமே...

'ஒகே..' சொன்னது தில்லுதுர மட்டும்தான்.

மஹாராஜா போல் தில்லுதுரயை யாரும் வேண்டாம் என்பார்களா என்ன..?

அந்தக் கோடீஸ்வரியும் தில்லுதுரயை செலெக்ட் செய்து விட்டாள்.

திருமணம் எல்லோரும் ஆச்சர்யப் படும்படி இனிதே முடிந்தது.

'பணத்துக்காக இப்படி ஒரு பெண்ணைக் கட்டுவானா ஒருவன்..?' என்ற நண்பர்களின் கேலிப் பார்வைகளை தில்லுதுர கண்டுகொள்ளவேயில்லை.

அதுதான் அப்படியென்றால், திருமணம் முடிந்து எங்கே சென்றாலும் அந்த அவலட்சண மனைவியையும் கையோடு உடன் அழைத்தபடியே சுற்றிக் கொண்டிருந்தான்.

மனைவி இல்லாமல் தில்லுதுரயை வெளியில் பார்ப்பது அபூர்வமாய் இருந்தது.

நண்பர்களுக்கோ இதுதான் ஆச்சர்யமான ஆச்சர்யமாய் இருந்தது.

ஒருநாள் ஒருவன் அதை தில்லுதுரயிடம் கேட்டும் விட்டான்.

"நன்பா... நீ பணத்திற்காகத்தான் அந்தப் பெண்ணைக் கட்டிக் கொண்டாயென்பது தெரியும். ஆனால், இந்த அளவுக்கு எங்கே போனாலும் அவளையும் கூடவே கூட்டிக் கொண்டு சுற்றுவதுதான் ஏன் என்று புரியவில்லை..!".

அவன் கேட்டு முடித்ததும் தில்லுதுர சோகமாய்ச் சொன்னான்.

"என் மனைவி கிட்ட ஒரு பழக்கம் இருக்கு. நான் அவளை விட்டு எப்பப் பிரிஞ்சு போனாலும் அவ எனக்கு ஒரு முத்தம் கொடுப்பா. பதிலுக்கு நான் அவளுக்கு ஒரு முத்தம் கொடுக்கணும். அது எப்படி முடியும் சொல்லு. அதனால, அதிலிருந்து தப்பிக்கத்தான் இப்படி அவளையும் கூடக் கூப்பிட்டுக்கிட்டே சுத்தறேன்..!".
.
.
.

Tuesday, October 5, 2010

முத்தம்

அன்று என் வீட்டில் ஒரு கெட்-டுகெதர் அரேன்ஞ்மென்ட் ஏற்பாடு செய்திருந்தேன்.

அதன் பொருட்டு வீட்டிற்கு உடன் பணிபுரியும் தோழிகள் சிலரை வரச் சொல்லியிருந்தேன்.

நானும் என் கணவரும் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருக்க, பார்ட்டிக்கு சற்று நேரத்திற்கு முன்பு... கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடிவிட்டு அப்படியே அழுக்காய் வந்து நின்றான் என் நான்கு வயது மகன் டேனி.

நான் அவனைப் பார்த்து,"டேனிக்குட்டி ஓடு... ஓடிபோய் முகத்தைப் பளிச்சுனு கழுவிட்டு வந்து நில்லு பார்ப்போம்...!".

டேனி உடனே மறுப்பாய்த் தலையை ஆட்டினான்.

"முடியாது... முகத்தைக் கழுவ மாட்டேன் போ...!".

சிலசமயங்களில், அவன் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தால் பிரச்சினையாகிவிடும் என்பதால்.. அவனை தாஜா செய்ய ஆரம்பித்தேன்.

"டேனி குட் பாய்தானே...? யாராவது டேனியப் பார்த்து 'அழுக்குப் பையன்'னு சொல்லலாமா...? இப்ப நீ போட்டிருக்கற ட்ரஸ் சூப்பரா இருக்கு. போய் முகத்தை மட்டும் நல்லா சோப்புப் போட்டு கழுவிட்டு வருவியாம். அப்பத்தான் பார்ட்டிக்கு வர்ற அம்மாவோட ஃபிரண்ட்ஸ் எல்லாம் 'யாரிந்த அழகான குட்டிப் பையன்'னு தூக்கி கன்னத்துல முத்தம் கொடுப்பாங்களாம்...?".

நான் செல்லமாய் அவனிடம் பேசப் பேச... லேசாய் மனம் மாறியவன் முகம் கழுவ ஒத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் போனான்.

பார்ட்டிக்கான டேபிளை ஒழுங்கு பண்ணிக் கொண்டிருக்கும்போது திருத்தமாய் ட்ரஸ் பண்ணிக்கொண்டு வேகவேகமாய் ஹாலுக்கு திரும்ப ஓடி வந்தவன், சிரித்தபடியே என்னிடம் சொன்னான்.

"அம்மா... அப்பாவும் முகம் கழுவிக்கிட்டு இருக்காங்க...!".
.
.
.

Wednesday, April 14, 2010

கன்னத்தில் முத்தமிட்டால்...








அது ஒரு அடர்ந்த காடு.

அதில் உள்ள ஒரு மரத்தில் ஏற ஒரு குட்டி ஆமை விடாமல் முயன்று கொண்டிருந்தது.

கொஞ்சம் முயற்சிக்கு அப்புறம் அது மரத்தில் ஏறியும் விட்டது.

ஏறி ஏறி மரத்தின் உச்சிக்குச் சென்ற அந்த ஆமை பறக்க முயற்சித்து... தன் முன்னிரு கால்களையும் ஆட்டியபடி கீழே குதித்தது. 

குதித்த ஆமை பறக்க முடியாமல் கீழே விழுந்தது.

சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும்
அதே போல ஏறி,
அதே போல பறக்க முயற்சித்து,
அதே போல கீழே விழுந்தது அந்த ஆமை.

மேலும் மேலும் இதுவே தொடர்வதையும் அந்த ஆமை மறுபடி மறுபடி தோற்றுப் போவதையும் மரத்தில் இருந்த இரு பறவைகள் கவலையுடன் கவனித்துக் கொண்டே இருந்தன.

கடைசியாய் அந்த பெண் பறவை தன் அருகில் அமர்ந்திருந்த ஆண் பறவை பக்கம் திரும்பி கவலையுடன் சொன்னது.


"என்னங்க... அவன் நம்ம கொழந்தை இல்லைங்கறதையும்... நாம அவனத் தத்து எடுத்திருக்கிறோம்ங்கற உண்மையையும் சொல்ல வேண்டிய நேரம் வந்திருச்சிண்ணு நினைக்கிறேன்...!".
.
.
.