Showing posts with label வேலை. Show all posts
Showing posts with label வேலை. Show all posts

Friday, August 16, 2013

தில்லுதுர அட் தியானா க்ளாஸ்

தில்லுதுர படித்து முடித்து நீண்ட நாட்களாக வேலையின்றி வீட்டில் சும்மா இருந்த காலம் அது.

அப்பா எவ்வளவு திட்டியும் கண்டுகொள்ளாமல், சும்மா இருப்பதின் சுகத்தை முழுதாய் அனுபவித்தபடி தில்லுதுர ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்.

திட்டித் திட்டி அலுத்துப்போய் இப்போதெல்லாம் அவர் தில்லுதுரயை திட்டுவதைக் கூட நிறுத்தி விட்டார்.

கொஞ்ச நாட்கள் போயிருக்கும்.

அன்று தில்லுதுரயின் அப்பா வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும், தில்லுதுரயின் அம்மா மகிழ்வுடன் அவரிடம் சொன்னார்.

”ஏங்க... விஷயம் தெரியுமா.! நம்ம பையனுக்கு நல்ல புத்தி வந்துடுச்சு.!”.

அவர் சொல்வதைக் கேட்ட அப்பா கோபத்துடன் கேட்டார்.

”ஏன்... உம்பையன் எங்கயும் வேலைக்குச் சேந்துட்டானா.?”.

அவர் கேட்டதும், தில்லுதுரயின் அம்மா சந்தோசத்துடன் சொன்னார்.

“இல்லீங்க... ஆனா அவனுக்கு நல்ல புத்தி வந்துடும். இன்னிலருந்து அவன் ஒரு தியான வகுப்பில சேர்ந்திருக்கான்.!”.

சொன்னதும் கடுப்புடன் திரும்பிய தில்லிதுரயின் அப்பா கோபமாய்ச் சொன்னார்.

“வெவரம் புரியாமப் பேசாத.! தியானம்ங்கறதே சும்மா இருக்கறதுதான். என்ன... இவ்வளவு காலம் தனியா சும்மா இருந்த உம்மகன் இனி கூட்டத்தோட சும்மா இருப்பான். அவ்வளவுதான் வித்தியாசம்.!”

அவர் சொல்லிக் கொண்டே போக, அதற்காக மகனுக்கு ரூபாய் ஐயாயிரம் கொடுத்த அதிர்ச்சியில் உறைந்திருந்தார் தில்லுதுரயின் அம்மா.
.
.
.


Friday, January 25, 2013

தில்லுதுரயின் ட்ரீம் ஜாப்




ட்ரீம் ஜாப் கெடைச்ச பின்னாலும் ஒரு மனுஷனுக்கு வேலை பிடிக்காமப் போகுமா..?

தில்லுதுரக்கு பிடிக்கவில்லை.

என்ன கதைனு கேளுங்க...

அது தில்லுதுர படித்து முடித்து வேலை தேடித்தேடி அலுத்துப் போயிருந்த காலம்.

வேலை கிடைக்காமல் வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்த போது, நண்பன் ராஜா சொன்னான்.

"சுந்தராபுரத்துல இருக்கற சொல்கேட்ட கணபதி கிட்ட வேண்டிக்கடா தில்லு. நம்ம சொன்னத கேக்கற  கணபதியாம்...கேட்டதெல்லாம் கொடுக்கறாராம்.!".

வேலை கிடைக்குமென்றால் எதை வேண்டுமென்றாலும் செய்யத் தயாராயிருந்த தில்லுதுர அன்று மாலையே அந்தக் கோவிலுக்குப் போனான்.

வேண்டுவதுதான் வேண்டுகிறோம்.... கொஞ்சம் நல்லாவே வேண்டிக்கலாம் என்று சொல்கேட்ட கணபதியிடம் கொஞ்சம் ஸ்ட்ராங்காகவே வேண்டிக் கொண்டான்.

"கடவுளே... என் பை எப்பவும் பணமா நெரஞ்சிருக்கற மாதிரி ஒரு வேலை; எனக்குனு ஒரு பெரிய வண்டி; அதுல எப்பவும் என்னைச் சுத்தி ஏகப்பட்ட பொண்ணுக... இது மட்டும் இந்த ஒரு மாசத்துக்குள்ள நடக்கற மாதிரி அருள்புரியப்பா ஆண்டவா...!".

தில்லுதுர வேண்டிய சமயத்தில் அந்தக் கோவில் மணியும் அடிக்க மஹா சந்தோஷத்தோடு வீடு வந்து சேர்ந்தான்.

அடுத்த மாதம் அவன் கேட்ட மாதிரியே ஒரு வேலைகிடைத்து விட்டது.

ஆனாலும்... தில்லுதுர இப்போதும் கடுப்புடன் தான் வேலைக்குப் போகிறான்.

ஏனென்றால்..... தில்லுதுர இப்ப ஒரு லேடீஸ் பஸ் கண்டக்டர்.!
.
.
.







Wednesday, June 16, 2010

டேனியின் அம்மா




டேனி தன் அப்பாவிடம் 'திருமணம் என்றால் என்ன...' என்பது பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தான்.

எவ்வளவோ சொல்லியும் அவனுக்குப் புரியாமல் போகவே... அவனது அப்பா என்னை எங்கள் திருமண ஆல்பத்தை எடுத்து வரச் சொன்னார்.

சமையலறையில் வேலையை முடித்துவிட்டுப் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த நான் கைகளைத் துடைத்துக் கொண்டு போய் நாற்காலியை எடுத்து, பீரோவின் அருகில் தள்ளி...

பீரோவின் மேலே இருந்த அந்தப் பெரிய திருமண ஆல்பத்தை எடுத்துக் கொண்டு அவரிடம் கொடுத்துவிட்டுத் திரும்பவும் சமையலறைக்குள் திரும்பவும் நுழைந்து விட்டேன்.

வெளியே அப்பா மகன் இருவரின் குரல்களும் கேட்டுக் கொண்டே இருந்தது.

அவர் ஏதோ சொல்லிக்கொண்டே வர... அவனது சந்தேகங்களும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

நான் சாப்பிடத் தேவையானவற்றை மேசையில் எடுத்து வைக்கும்போது அவர் ஒருவழியாய் அவனுக்குத் திருமணம் என்ரால் என்ன என்பதை வெற்றிகரமாய்ப் புரியவைத்துவிட்டு அலுப்புடன் ஆல்பத்தை மூடி வைத்துக் கொண்டிருந்தார்.

டேனியும் ஒருவாறு புரிந்த முகபாவத்துடனே எழும்போது, அவனுக்கே உரிய குழந்தைத்தனத்துடன் அப்பாவிடம் கேட்டான்.

"அப்ப இப்படித்தான்... அம்மா நம்ம வீட்டுக்கு வேலை செய்ய வந்தாங்களாப்பா...?".
.
.
.

Tuesday, February 9, 2010

கவலைப்படாதே சகோதரா....


கம்பெனியின் முதலாளி மற்றவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
"பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டே போகிறது. எல்லாப் பக்கமும் லாஸ். பணம் புரட்டவே முடியல. நெனச்சு நெனச்சு பிரஷர் அதிகமாகிட்டே போகுது. டாக்டர்கிட்ட போனா கவலைப்பட்டா இன்னும் உடம்பு மோசமாகிடும்னு சொல்றார்...".
கேட்டுக் கொண்டிருந்த அடுத்தவர் கேட்டார். "அதுக்கு என்ன பண்ணினே...?".
"புதுசா ஒருத்தன வேலைக்குச் சேர்த்திருக்கேன். எனக்கு பதிலா கவலைப்படறதுதான் அவன் வேலை. மாசம் ஒரு லட்சம் சம்பளம். அவன் வேலைக்குச் சேர்ந்து நாளையோட ஒரு மாசம் முடியுது..."
"ஏற்கனவே லாஸ்னு சொல்றே... இப்போ அவனுக்கு எப்படி ஒரு லட்சம் சம்பளம் கொடுப்ப...?" என்று அவர் நண்பர் கேட்டார்.
அதற்கு அந்த முதலாளி, "அதைப் பத்திதான் நான் கவலைப்பட வேண்டியதில்லையே...!".

Friday, February 5, 2010

நாய்ப் பிழைப்பு


நாய் ஒன்று அதன் படிப்பு மற்றும் தகுதிக்கேற்ற வேலை தேடிப் போகும்போது அந்த அறிவிப்புப் பலகையைப் பார்த்தது.
'பர்ஸனல் அஸிஸ்டென்ட் தேவை. தகுதி: ஸ்பீடாக டைப்ரைட்டிங் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். இரண்டு மொழிகள் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.'
நாய் வேகமாய் உள்ளே சென்றது. ஒரு மெஷினை வாங்கி மின்னல் வேகத்தில் டைப் செய்து காட்டியது. முதலாளிக்கு பயங்கரத் திருப்தி.
முதலாளி கேட்டார், "ஓகே... உன்னோட மொழி பேசுவேனு தெரியும்... வேற என்ன பாஷை பேசுவே..?".
நாய் தொண்டையை கனைத்துக்கொண்டு அழகாய் மெல்லிய குரலில் சங்கீதமாய், "மியாவ்..." என்றது.