தில்லுதுர அவரது நண்பர் ராஜாவுடன் பார்க்கில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது, ஒரு காக்கா தில்லுதுர மீது பறந்தபடியே கக்கா பண்ணிவிட்டது.
அசிங்கமாகிவிட்ட சட்டையைத் துடைக்க தண்ணீர் எடுத்துவர, ராஜா வேகவேகமாய் பக்கத்திலிருந்த பைப்பை நோக்கி ஓடினார்.
தில்லுதுர நண்பரைப் பார்த்துச் சொன்னார்.
"யூஸ் இல்ல, விட்டுடுங்க...!".
குழப்பமாய்த் தன்னைப் பார்த்த ராஜாவிடம் தில்லுதுர தொடர்ந்து சொன்னார்.
"எப்புடியும் நீங்க தண்ணியப் புடிச்சுட்டு வர்றதுக்குள்ள, அந்தக் காக்கா இன்னும் அஞ்சாறு கிலோமீட்டர் பறந்து போயிருக்குமே...!" என்றார்.
.
.
.
Showing posts with label தண்ணி. Show all posts
Showing posts with label தண்ணி. Show all posts
Friday, January 7, 2011
காக்காவும் அதன் கக்காவும்
Labels:
அசிங்கம்,
கக்கா,
காக்கா,
கிலோமீட்டர்,
தண்ணி,
பார்க்,
பைப்,
யூஸ்
7
comments
Tuesday, June 1, 2010
ஊய்... ஊய்...!
ராக்கேஷுக்கு எதிர்பாராத ஒரு ஆக்ஸிடண்ட்டில் ஒரு கை போய்விட்டது.
அவனுக்கு அதனால் நிறையப் பிரச்சினைகள்.
நினைத்தபடி கார் ஓட்டமுடியவில்லை.
கிடார் வாசிக்க முடியவில்லை.
தண்ணி அடிக்கும் போது கிளாஸைக் கீழே வைக்காமல் ஊறுகாயை எடுத்து ஒரு ஓட்டு ஓட்ட முடியவில்லை.
ராக்கேஷால் எதைச் சகித்துக் கொண்டாலும் இந்தக் கடைசிக் காரணத்தை மட்டும் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.
எனவே, அவன் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தான்.
அதைச் செயல்படுத்த முடிவு செய்து ஏழாவது மாடி ஜன்னலில் ஏறி குதிக்க எத்தனிக்கும் போது தான் அதைப் பார்த்தான்.
கீழே ஒருவன் இரண்டு கைகளும் இல்லாமல் சந்தோஷமாய் குதித்துக் குதித்து ஓடிக் கொண்டிருந்தான்.
ராக்கேஷுக்கு ஒரு கணத்தில் மனது மாறிப்போனது.
'அட... இரண்டு கைகளும் இல்லாதவனே இவ்வளவு குஷியாய் இருக்கும் போது நாம் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்...?'
இதை நினைத்ததும் ஜன்னலிலிருந்து கீழே இறங்கிய ராக்கேஷ், தன் உயிரை சரியான சமயத்தில் காப்பாற்றிய அந்த மனிதனை சந்தித்து நன்றி சொல்ல வேகமாய்க் மாடியிலிருந்து இறங்கி ஓடினான்.
கீழே வந்து பார்த்தால், அவன் குதித்துக் குதித்து ஓடியதோடு அல்லாமல் "ஊய்... ஊய்...!" என்று சப்தம் எழுப்பியவாறு உற்சாகமாய் ஓடிக் கொண்டிருந்தான்.
ராக்கேஷுக்கோ ஆச்சர்யம் உச்சத்திற்கே போய்விட்டது.
'எப்படி ஒரு மனிதனால் இரண்டு கைகளும் இல்லாமல் இவ்வளவு உற்சாகமாய் இருக்கமுடிகிறது...?'
ராக்கேஷ் அவனை மறித்து அதைக் கேட்டும் விட்டான்.
அவனோ ராக்கேஷிடம் எரிச்சலுடன் பதில் சொன்னான்.
"யாருப்பா சந்தோஷமா இருக்கேன்னு சொன்னது...? நானே உட்கார்ற இடத்துல அரிக்குதுனு சொறிஞ்சுவிட ட்ரை பண்ணிட்டுருக்கேன்... நீ வேற கடுப்பக் கிளப்பிக்கிட்டு...!" என்றவன் திரும்பவும், "ஊய்... ஊய்...!" என்று சப்தம் எழுப்பியபடி வேகமாய் ஓட ஆரம்பித்தான்.
.
.
.
Monday, May 10, 2010
ஒரு கெமிஸ்ட்ரி ஜோக்
நியூட்ரான் தெரியுமா உங்களுக்கு...?
ஒரு வீக் எண்ட்.... சாயங்காலம்.
அவனும் அவன் தோஸ்த்து இன்னொரு நியூட்ரானும் ஒரு நாள் தண்ணி அடிக்க பக்கத்துல இருக்கற டாஸ்மாக் பாருக்குப் போனாய்ங்க.
போனாய்ங்களா.... அங்கே தண்ணி அடிச்சு அவனுக ஃபுல் மப்பு.
எல்லாம் முடிஞ்சு கடைசியா நம்ம நியூட்ரான் பார் அட்டென்டர்கிட்ட கேட்டான்.
"இன்னாப்பா... நமக்கு எவ்ளோ சார்ஜு...?"
இதைக் கேட்டதும் கூடக் குடித்துக் கொண்டிருந்த நண்பன் நியூட்ரான் சொன்னது.
"ஏய்... இன்னாப்பா நீ லூஸூ மாதிரிக் கேட்டிகிணுகீற...? நாமதான் நியூட்ரான் ஆச்சே... நமக்கு ஏது சார்ஜூ...?".
.
.
.
Labels:
கெமிஸ்ட்ரி,
டாஸ்மாக்,
தண்ணி,
நண்பன்,
நியூட்ரான்,
லூஸூ,
வீக் எண்ட்
3
comments
Subscribe to:
Posts (Atom)

