Showing posts with label ஒருவன். Show all posts
Showing posts with label ஒருவன். Show all posts

Tuesday, June 8, 2010

நரமாமிசம் சாப்பிடுபவன் வீட்டு விருந்து



அது நரமாமிசம் சாப்பிடுபவர்கள் வசிக்கும் காடு.

அதில் ஒருவன் நரேன்.

அதன் தலைவர் அன்று அவன் வீட்டுக்கு விருந்துக்கு வருவதாய் இருந்தது.

மதியம் தலைவர் வந்தார்.

வீட்டினுள்ளே குழம்பு கொதிக்கும் வாசம் தூள் கிளப்பியது.

அவர் மிக சந்தோசமாய் சொன்னார்.

"தம்பி... உன் மனைவி இன்றொரு அற்புதமான விருந்தளிக்கப் போகிறாளென்றே நம்புகிறேன்...!".

நரேன் சோகமாய் பதில் சொன்னான்.

"அதில் ஒன்றும் சந்தேகமில்லை... ஆனால், இனி அவள் இல்லாமல் எப்படி வாழப் போகிறேன் என்றுதான் தெரியவில்லை...!".
.
.
.

Thursday, March 11, 2010

டீலா நோ டீலா...


ஆஃபிஸில் ஒருவன் நண்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

"நான் வெட்டிங் டே அன்னிக்கு என் மனைவிக்கு ஒரு வைர நெக்லஸ் வாங்கிக் கொடுத்தேன். அதுக்கப்புறம் பத்து மாசமா அவ என் கூடப் பேசறதயே நிறுத்திட்டா...!".

ஆச்சர்யப்பட்டுப் போன அவன் நண்பன் கேட்டான்.

"ஏன்...? என்னாச்சு..?".

அவன் கூலாய் பதில் சொன்னான்.

"அதுதான் டீலே...!".
.
.
.