Showing posts with label தனுஷ். Show all posts
Showing posts with label தனுஷ். Show all posts

Monday, April 2, 2012

இப்ப என்ன செய்வீங்க.?

(நகைச்சுவைதான் என்றாலும்... ஒரு மனிதனாக, ஒரு இக்கட்டான சமயத்தில் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள் எனத் தெரிந்து கொள்ள கேட்கப்படும் கற்பனைக் கதை இது. எனவே, வரிவரியாக கவனமாகப் படித்து பதில் சொல்லவும்)

நீங்கள் ஒரு தமிழர்.

அதிலும் 'மயக்கம் என்ன..?' தனுஷ் போல ஒரு அற்புதமான ஃபோட்டோகிராபர்.

நீங்கள் இப்போது ஒரு பத்திரிக்கை சார்பாக, கடலில் சூரியன் மறைவதைப் பார்க்க வந்திருக்கும் பிரதமரை ஃபோட்டோ எடுக்க வந்திருக்கிறீர்கள்.

கடற்கரையில் பிரதமருக்காக காத்து நிற்கும்போது ஒரு சூறாவளி அடிக்கிறது.

சூறாவளி என்றால் கடும் சூறாவளி.

நீங்கள் இப்போது அந்த சூறாவளியின் சரியான மையத்தில் நிற்கிறீர்கள்.

வீடும் மரமும் மரங்களும் கால்நடைகளும் கடல் நீரும் இப்போது உங்களைச் சுற்றி சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது.

உங்களால் இப்போது செய்யக் கூடியது ஒன்றும் இல்லை என்றாலும், இயற்கையின் பெரும்பலத்தை உணர்த்தும் அந்த அற்புதமான தருணத்தை அழகழகான ஃபோட்டோக்களாய் கேமராவில் சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறீர்கள்.

அப்போதுதான், அந்தச் சூறாவளியின் நடுவே உயிருக்காக போராடும் அந்த மனிதனைப் பார்க்கிறீர்கள்.

காற்றும் நீரும் சகதியும் அந்த மனிதனை சுழற்றி எறிய எறிய பக்கத்தில் சென்ற நீங்கள் அந்த மனிதனை எங்கோ பார்த்திருப்பதாய் உணர்கிறீர்கள்.

ஓ... அது நமது பிரதமர்.!

இப்போது உங்களுக்கு ரெண்டு வாய்ப்பு இருக்கிறது.

ஒன்று உங்கள் தேசத்தின் பிரதமர் உயிரைக் காக்கும் அரிய வாய்ப்பு.

அல்லது ஒரு பவர்ஃபுல் மனிதரின் கடைசி நிமிடத்தை ஃபோட்டோவாய் பதிவு செய்ததற்காக, ஃபோட்டோவின் ஆஸ்கார் போன்ற புலிட்சர் விருது.

இப்போது தான் நீங்கள் பதில் சொல்ல வேண்டிய தருணம்.

தயவுசெய்து இந்தக் கேள்விக்கு நியாயமான பதிலைச் சொல்லுங்கள்.

"நீங்கள் இப்போது இந்தத் தருணத்தில் இதைப் பதிவு செய்ய கலர் ஃபிலிமைத் தேர்ந்தெடுப்பீர்களா... இல்லை, காலம் கடந்து நிற்க வேண்டும் என்பதற்காக கருப்பு வெள்ளை ஃபிலிமைத் தேர்ந்தெடுப்பீர்களா.?".
.
.
.

Tuesday, June 15, 2010

தில்லுதுர அட் கம்ப்யூட்டர்


தில்லுதுர படிச்சு முடிச்சு எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு சாப்ட்வேர் கோர்ஸ் வேற படிச்சாரு.

அதப் படிச்சுட்டு நானும் ஒரு சாப்ட்வேர் ஆளுன்னு ஒரு கம்பெனில வேலைக்கு வேற சேர்ந்தாச்சு.

ஒரு நாள் அவர் கம்பெனில பாஸ்வேர்ட் ஆடிட் ஒண்ணு நடந்துச்சு.

எல்லோரும் அவரவர் பாஸ்வேர்ட் என்னனு கம்பெனிக்குச் சொல்லணும்.

எல்லோர்கிட்டயும் பாஸ்வேர்ட் கேட்டுக்கிட்டே வந்தவங்க தில்லுதுரகிட்ட அவர் பாஸ்வேர்டை கேட்டதும் அப்படியே ஷாக்காயிட்டாங்க.

அந்த டீம் கேப்டன் கேட்டார்.

"எங்கே... உங்க பாஸ்வேர்டை இன்னொரு தடவை சொல்லுங்க...?".

தில்லுதுர அசராமல் சொன்னார்.

"கமல்ஹாசன்ரஜினிகாந்த்விஜய்ரித்தீஷ்டெல்லிசூர்யாஅஜித்தனுஷ்சிம்பு".

அவர் கேட்டார்.

"எதுக்காக இவ்வளவு பெரிய பாஸ்வேர்ட்...? எனக்கு ஒண்ணும் புரியல...!".

தில்லுதுர அதற்கு சீரியஸாய் இப்படி பதில் சொன்னார்.

"கம்ப்யூட்டர்லதான் புது பாஸ்வேர்ட் ஜெனெரேட் பண்ணறப்ப பாஸ்வேர்ட் எட்டு கேரக்டருக்கு குறையாமல் இருக்கணும்... அதுக்கு இடையில ஒரு கேப்பிடலாவது இருக்கணும்னு போட்டிருந்ததே...!" என்றார்.
.
.
.