Showing posts with label எருமைமாடு. Show all posts
Showing posts with label எருமைமாடு. Show all posts

Monday, January 6, 2014

அசிங்கப்பட்டார் தில்லுதுர



அலுவலகத்திலிருந்து தில்லுதுர திரும்பும் போதே, தன் மனைவி பதட்டத்துடன் வாசலில் காத்திருப்பதைப் பார்த்தார்.

தில்லுதுரயை நேரில் பார்த்ததும் தான், அவர் நிம்மதியுடன் நீண்ட ஒரு பெருமூச்சை விட்டபடி சொன்னார்.

"அப்பாடி... உங்களுக்கு ஒண்ணுமில்லியே.! நான்கூட பயந்தே போய்ட்டேன்.!"

மனைவி சொன்னதைக் கேட்டதும் ஆச்சர்யத்துடன் தில்லுதுர கேட்டார்.

"ஏன்... பயப்படற அளவுக்கு என்ன ஆச்சு.?".

தில்லுதுர கேட்டதும் அவர் மனைவி அதே பதைபதைப்பு மாறாமல் சொன்னார்.

"இல்ல... இப்ப கொஞ்சம் முன்ன இந்த வழிய போன ஒருத்தன் சொன்னான், 'தெரு முனைல கருப்பா, குண்டா, எரும மாடு மாதிரி ஒரு ஆளு அடிபட்டுக் கெடக்கான்னு..'  அதான் நீங்களோனு பயந்திட்டேன்.!" என்றாள்.
.
.
.