Monday, February 21, 2011

ஒரு வார்த்தைக்கு என்ன எடை..?

பாரசீகக் கவிஞரும் ஞானியுமான ஷாஅதி ஏதோ ஒரு விஷயமாக அந்தப் பயில்வானைப் பார்க்க அந்த ஊருக்கு வந்திருந்தார்.

பயில்வானோ ஒரு அற்புதமான பயில்வான்.

எவ்வளவு எடை வேண்டுமானாலும் தூக்குவார்... நாட்டில் அவருடன் எடை தூக்கும் போட்டியில் அவரை யாரும் வென்றதும் கிடையாது.

எப்போதும் அவருடன் போட்டியிட்டு எவரும் இதுவரை ஜெயித்ததும் கிடையாது.

ஷாஅதி அவரைப் பார்க்க வந்தபோது பயில்வான் மிகுந்த கோபத்துடன் இருந்தார்.

வீட்டின் உள்ளே, கோபமாய் அவர் குரலும் பாத்திரங்கள் விழுந்து உடைவதுமாய் சப்தங்களும் கேட்டுக் கொண்டிருந்தது.

ஷாஅதி என்ன விஷயமென்று பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்தார்.

அவர் சொன்னார்.

"பக்கத்து ஊரில் யாரோ பயில்வானை கேவலமாய்ப் பேசி விட்டார்களாம். அதைக் கேள்விப்பட்டு பயில்வான் பயங்கர கோபமாகிவிட்டார். அப்போதிருந்து இப்படித்தான் வீட்டுக்குள் சப்தங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறது..!".

அதைக் கேட்ட ஷாஅதி அந்தப் பக்கத்து வீட்டுக்காரரிடம் சொன்னார்.
 
"எவ்வளவோ பயங்கரமான எடைகளைத் தூக்கிய இந்த பயில்வானால், கேவலம் யாரோ சொல்லிய ஓரிரு வார்த்தைகளின் கனத்தைத் தாங்க முடியவில்லையா...? ஐயோ பாவம்..!" என்றாராம்.
.
.
.

6 comments:

சென்ஷி said...

எத்தனை ஆழமான கருத்தை எளிமையா சொல்லியிருக்காரு.. அருமை :))

Thangaraju Ramasamy said...

:) Nice..

rameshbabublogger said...

நல்லாருக்குங்க‌

சக்தி கல்வி மையம் said...

கனமான விஷயததை எளிமையா சொல்லியிருக்கீங்க.. அருமை ...

வந்து நம்ம கவிதையும் பாருங்க..

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_21.html

தினேஷ் ராம் said...

அருமை :-)

-Mr.R.Din

உமா கிருஷ்ணமூர்த்தி said...

சுளீரென்ற உண்மை!இப்படி வார்த்தைகளின் கணம் தாங்காதவர்கள் தானே இங்கே அதிகம்.

Post a Comment