நானும் என் மகன் டேனியும் அவன் அப்பாவுடன், பர்ச்சேஸ் முடித்து காரில் திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் நடந்தது இது.
நாங்கள் இருவரும் முன் சீட்டில் உட்கார்ந்திருக்க, டேனி பின் சீட்டில் ஜன்னலில் வேடிக்கை பார்த்தபடி, அப்போதுதான் வாங்கியிருந்த ஆப்பிள்களில் ஒன்றை எடுத்து பாதி சாப்பிட்டிருந்தவன் கேட்டான்.
"அப்பா... ஏன் என்னோட ஆப்பிள் பிரவுன் கலரா மாறிடுச்சு..?".
தன் மகன் எதையும் தெளிவாய் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையை உடைய அவன் அப்பா, வண்டியை ஓட்டியபடியே அவனுக்கு விளக்கமாய் பதில் சொல்ல ஆரம்பித்தார்.
"ஏன்னா, நீ அதோட தோலை சாப்பிட்ட உடனே, அதோட வெள்ளைச் சதையில வெளியில இருக்கிற காத்து படுது. அப்ப, காத்துல இருக்கற ஆக்ஸிஜனோட சேர்ந்து அது ஆக்ஸிடைஸ் ஆகுது. அதனால, அதோட மாலிக்யூலர் ஸ்ட்ரக்சர் மாற்றமாகி அதோட கலரும் மாறுது..!".
தெளிவாய் புரியும்படி சொன்ன திருப்தியில் என் கணவர், வண்டியைத் தொடர்ந்து ஓட்டிக் கொண்டிருக்க, ஒரு நீண்ட மௌனத்திற்கு அப்புறம் டேனி அவரிடம் கேட்டான்.
"அப்பா... இப்ப நீங்க என் கூடவா பேசிக்கிட்டு இருந்தீங்க..?".
.
.
.
4 comments:
Cute :)
மீனாட்சி அண்ணன்னா மீனாட்சி அண்ணணன் தான் ..
நல்லா இருக்கு அண்ணா ..
I like ending punch...
டேனியே உடனே பார்க்கணும் .. என்னா வில்லத்தனம் ??
Post a Comment