Thursday, February 17, 2011

தோடுடைய செவியன்

நான் ஒரு தமிழ் முனைவர் பட்டம் வாங்கியவள்.

நான் படித்த கல்லூரி கோவையில் சிவனடியார்களால் நடத்தப்பட்ட கல்லூரி.

படித்து முடித்து நான் முதன்முதலில் வேலை பார்த்த பள்ளியோ முருகனடிமைகளால் நடத்தப்பட்டது.

தவிரவும், எனது குடும்பமும் பக்திமயமான குடும்பம் என்பதால், எனது
கல்லூரிக்கால ஆய்வுகளும் பக்தி சார்ந்தே இருந்தன.
 
ஆனால், திருமணத்துக்குப் பிறகு நான் வேலை பார்த்த இடத்தினால், ஆரோக்கிய மாதாவும் குழந்தை ஏசுவும் என் பூசையறையில் புதிதாய் குடி புகுந்திருக்கிறார்கள்.

ஆனால், இந்தக் கதை என்னைப் பற்றியதில்லை.

என் மகன் டேனிக்கும் எனக்கும் நடக்கும் பிரச்சினை பற்றியது.

அவன் கதை கேட்கும் போதெல்லாம் நான் எனக்குத் தெரிந்த புராணக் கதைகளை அவனுக்கு சொல்வதையே  வழக்கமாய் வைத்திருந்தேன்..

கூடவே, அவன் அவனுடைய மேலைநாட்டுக் கதைகளைப் பேசும்போதெல்லாம் நான் நமது கதைகளை உயர்த்திப் பிடிப்பது என் வழக்கமும் கூட.

அவன் ஆகாய விமானம் பற்றிப் பேசினால், நான் நமது கற்பனையான புஷ்பக விமானம் பற்றிச் சொல்லுவேன்.

அவன் சூப்பர்மேன் பற்றிச் சொன்னால் நான் ஆஞ்சநேயர் பற்றியும்,
ஹாரிபாட்டர் சொல்லும்போது நமது அம்புலிமாமா பற்றியும் சொல்வது என் வழக்கம்.

அதுபோல்தான் அன்றும் நடந்தது.

தூக்கம் வராமல் கதை கேட்ட டேனிக்கு நான் அஸ்வினி தேவர்கள் கதையை சொல்ல முடிவெடுத்தேன்... சொல்லவும் ஆரம்பித்தேன்.

சதாசர்வ காலமும் சிவனைப் பற்றிப் பாடுவதே அஸ்வினி தேவர்கள்
என்றழைக்கப்படும் அந்த ரெட்டையர்களின் வேலை.

ஒரு சமயம் சிவபெருமான் அவர்கள் பக்தியில் மகிழ்ந்து என்ன வரம்
வேண்டுமென்று கேட்டார்.

தீவிர சிவபக்தர்களான அஸ்வினி தேவர்கள் இருவரும்,"பெருமானே.. நாங்கள் இருவரும் எந்நேரமும் உன்னைப் பற்றிய பதிகங்களைப் பாடிக் கொண்டே இருக்க வேண்டும். அது எப்போதும் உனது காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்...!" என்று கேட்டனர்.

இறைவனும் அவர்கள் ஆசையை நிறைவேற்ற, அவ்விருவரையும் தோடுகளாக்கி தன்னிரு காதுகளில் அணிந்து கொண்டார்.

இதுதான், சிவபெருமான் தோடுடைய செவியன் ஆன கதை என்று சொல்லி முடித்தேன்.

பக்தி இருந்தால் பரமனையும் அடையலாம் என்பதைச் சொல்லும் அஸ்வினிதேவர்களின் கதையிலிருந்து, டேனி என்ன கற்றுக் கொண்டான் என்பதைத் தெரிந்துகொள்ள அவனிடம் கேட்டேன்.

"டேனி.. இந்தக் கதையிலருந்து உனக்கு என்ன தெரியுது.?".

கண்கொட்டாமல் கதை கேட்டுக் கொண்டிருந்த டேனி மகா ஆர்வமாய் பதில் சொன்னான்.

"ஐபாட் ஹெட்ஃபோனையும் நாமதான் மொதல்ல கண்டுபுடிச்சிருக்கோம்,
இல்லம்மா..?" என்றான்.
.
.
.

14 comments:

செல்வா said...

ஹா ஹா.. செம அண்ணா ..ஹெட் போன நாமதான் கண்டுபிடிசோம்னு சொல்லிட்டீங்க. ஆனா உண்மைதான். அவுங்க அதுக்கு முன்னாடி அப்படி கதை சொன்னதாலதான் அவன் அப்படி புரிஞ்சிகிட்டான் ..

இளைய கவி said...

super .. very nice ..

இளைய கவி said...

super good one.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அட.. உங்கள் மகன் சொன்னது சரிதான் போல.. ஹா..ஹா

Nanjil Kannan said...

varngaalathil dannie valamayaai varuvaan :))))))

வரதராஜலு .பூ said...

ரொம்ப நல்லா இருக்கு.

Jaishree Iyer said...

Superb!

ஆயிஷா said...

ரெம்ப நல்லா இருக்கு.

Unknown said...

/"ஐபாட் ஹெட்ஃபோனையும் நாமதான் மொதல்ல கண்டுபுடிச்சிருக்கோம்,
இல்லம்மா..?" என்றான்.
/

:))

Unknown said...

அட்டகாசம் போங்க..!

Unknown said...

டேனிக்கு என்னோட முத்தம் ஒண்ணு பார்சல்..!

Unknown said...

அருமை.. நன்றாக இருந்தது..:)

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல பகிர்வு...

தங்களைப் பற்றிய விவரம் எதுவும் இல்லையே..!!

இன்றுதான் முதலில் இந்த வலைப்பக்கத்துக்கு வருகிறேன்

உமா கிருஷ்ணமூர்த்தி said...

நல்ல பதிவு !

Post a Comment