அன்று தில்லுதுர தனது நிறுவனத்தை நடத்தும் ஏரியாவின், ஓனர்ஸ் அசோசியேஷன் மெம்பர்கள் அவரைப் பார்க்க வந்திருந்தார்கள்.
ஓனர்ஸ் அசோசியேஷனுக்கு இதுவரை ஒரு பைசா கூடத் தராத தில்லுதுரயிடமிருந்து, இந்த முறை ஒரு நல்ல தொகையைப் பெறாமல் போகக் கூடாது என்ற முடிவில் வந்திருந்தார்கள் அவர்கள்.
தில்லுதுரயின் டேபிளுக்கு வந்ததும் அவர்களில் ஒருவர் ஆரம்பித்தார்.
"தலைவரே... நம்மளோடது வருஷத்துக்கு 50கோடி டர்ன் - ஓவர் பண்ணற கம்பெனி. ஆனாலும், இதுவரை நீங்க ஓனர்ஸ் அசோசியேஷனுக்கு எதுவும் உதவி செய்யல.! அதனால, இந்தத் தடவை நீங்க எதாவது ஒரு பெரிய தொகைக்கு செக் கொடுத்தே ஆகணும்..!".
கறாராகச் சொன்னவரை, கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தார் தில்லுதுர.
"என் வருமானத்தைப் பத்திச் சொல்லறீங்களே... என் அம்மா பத்து வருஷமா படுத்த படுக்கையா இருந்து போன மாசம்தான் ஹாஸ்பிடலை விட்டு வந்தாங்க.! அவங்களுக்கு எத்தனை கோடி செலவாச்சுனு உங்க யாருக்காவது தெரியுமாப்பா..?".
வந்தவர்கள் தெரியாது என்று மெல்லத் தலையாட்டினார்கள்.
தில்லுதுர தொடர்ந்தார்.
"என் தம்பி.. கண்ணு தெரியாம, கால் நடக்க முடியாம இருந்து ஆறு மாசம் முன்னாடி அவனுக்கு ஆப்பரேஷன் செஞ்சு சரி செஞ்சோமே.... அதுக்கு எத்தனை பணம் செலவாச்சுனு தெரியுமா உங்களுக்கு..?".
வந்தவர்கள் இன்னும் சங்கடத்தோடு தெரியாது என்று மறுபடி தலையாட்டினார்கள்.
தில்லுதுர தனது கோபம் ஆறாமல் தொடர்ந்தார்.
"என் தங்கச்சியோட கணவர், ரெண்டு மாசம் முன்னாடி ஒரு ரோட் ஆக்ஸிடென்ட்ல இறந்து போனாரு. என் தங்கச்சி மூணு கைக்குழந்தையோட கையில காசு இல்லாம கஷ்டப்படறாளே... அவளுக்கு மாசம் என்ன செலவாகுது தெரியுமா உங்களுக்கு..?".
வந்தவர்கள் மன்னிப்புக் கோரும் வகையில்,"மன்னிச்சுக்கங்க தில்லுதுர... எங்களுக்கு இது எதுவுமே தெரியாது...!'" என்றதும், தில்லுதுர சற்றே கோபம் தணிந்த குரலில் சொன்னார்.
"இவ்வளவு கஷ்டப்படற அவங்களுக்கே நான் இதுவரை ஒரு பைசா தந்ததில்ல. நீங்க யாருன்னு உங்களுக்கு கொடுக்கறதுனு சொல்லுங்க...!"
.
.
.
9 comments:
இப்படியும் ஒரு கருமியா? LOL
amas32
:))
எப்பவும், நாம செலவு செய்யாம இருந்தா, 'சிக்கனம்' ன்னு சொல்லிப்போம்..மத்தவங்களுக்கு 'கருமி' ன்னு பெயர்வைப்போம்.இவரு, எப்படி பார்த்தாலுமே கருமி தான்..
அருமை..
எங்காளு சிங்கமுல்ல!
உங்க கற்பனைக்கு அளவே இல்லை குரு..:-)))))
அசராம அடிச்சிருக்காருய்ய தில்லு தொர....
தில்லு தொரைய போட்டுரு மச்சி ..அந்த புள்ள வேண்டாம்....
சிக்கனத்தின் தலைவர் தில்லுதுர வாழ்க
உண்மை.. என்ன நிஜ தி.துரைகள் கோவில், பூஜை, Owners association function போன்றவற்றிற்கு அள்ளி தெளிப்பார்கள்.. இது எம்.ஆர்.ராதா வகை நகை.. அருமை..
Post a Comment