Wednesday, June 20, 2012

டேனியின் அனிதா மிஸ்

டேனிக்கு ஆண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறந்தாகிவிட்டது.

மூன்று நாட்கள் அவனுடைய யுகேஜி வகுப்புகளுக்கும் போய் வந்துவிட்டான் அவன்.

மூன்றாம் இரவு தூங்கும் முன் அவன் அப்பாவிடம் வந்த டேனி கண்களை விரித்துக் கொண்டு சொன்னான்.

"தெரியுமாப்பா... எங்க அனிதா மிஸ் முந்தாநேத்து சொன்னாங்க... அவங்க
நம்ம வீட்ல ஒரு சீக்ரெட் கேமரா ஃபிக்ஸ் பண்ணிருக்காங்க.!".

ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட டேனியின் அப்பாவும்
அதே ஆச்சர்யத்துடன் அவனிடம் கேட்டார்.

"அப்படியா... எதுக்கு.?".

டேனி தன் அப்பாவுக்கு தெரியாத ஒரு விஷயத்தை விளக்கும் ஆர்வத்துடன் அவரிடம் தொடர்ந்து சொன்னான்.

"ஸ்டூடன்ட்ஸ் எல்லாம் டெய்லி நைட்டு பெட்டுக்கு போறதுக்கு முன்னாடி பிரஷ் பண்ணிட்டுத்தான் தூங்கணும். இல்லைனா, ஸ்டூடன்ட்ஸ் காலைல
வந்ததும் எங்க அனிதா மிஸ் அந்த சீக்ரெட் கேமராவை ஓப்பன் பண்ணிப் பாப்பாங்க. யாரெல்லாம் நைட் பிரஷ் பண்ணலையோ அவங்களுக்கெல்லாம் பனிஷ்மென்ட்... தெரியுமா.?".

டேனி சொன்னதும் அவன் அப்பா அதே தொனியில் அவனிடம் சொன்னார்.

"அய்யய்யோ... அப்ப நீ தூங்கப் போறதுக்கு முன்ன இன்னிக்கு பிரஷ் பண்ணனுமா.?".

அவர் கேட்டதும் டேனி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் சொன்னான்.
"இல்லப்பா... வேணாம்.!".

டேனி அப்படிச் சொன்னதும் அரண்டு போன அவன் அப்பா அவனிடம் கேட்டார்.

"என்னது வேண்டாமா... அப்புறம் மிஸ் பனிஷ்மென்ட் கொடுப்பாங்களே.!".

அவர் அப்படிக் கேட்டதும் டேனி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்னான்.

"நேத்துக் கூடத்தான் நான் பிரஷ் பண்ணல... ஆனா, மிஸ் ஒண்ணுமே சொல்லலியே.!"
.
.
.


13 comments:

சைக்கிள்காரன் said...

:-)))

சைக்கிள்காரன் said...

ஹா ஹா டேனி டேனி

Anonymous said...

hahaaha zooperuuuuuuuuu

chinnapiyan said...

good. ரொம்ப சிம்பிளா இருந்தாலும் அதில் ஒரு நகைச்சுவை. பசங்க பசங்கதான். வாழ்க வளர்க

Rajan said...

இந்த கால பசங்க ....

maithriim said...

:-)) Children!

amas32

Viji said...

நல்ல பதிவு :)

Viji said...

நம்ம பசங்க எப்பவுமே வெவரமானவங்க ...

lakshmi said...

Superp :))))

'பரிவை' சே.குமார் said...

ஹா... ஹா...
இப்ப உள்ள பிள்ளைங்களுக்கு நாம எதுவும் சொல்ல வேண்டியதில்லை.
அருமை.

Anonymous said...

ஒரு நிமிஷத்துக்குள்ளே படிச்சு முடிச்சிடலாம் ... சூப்பர் @ஸ்வீட்சுதா

தமிழரசி said...

எங்க வீட்டின் அருகே சாஸ்வதா என்ற குட்டிப்பெண்ணை எனக்கு ரொம்பப் பிடிக்கும்..இந்தப்பதிவு அவள் என்னிடம் பேசிய சில புத்திசாலித்தனமான மழலையை நினைவுபடுத்துகிறது..

Kollapuram.com said...

மிகவும் நன்றாக உள்ளது தொடர வாழ்த்துக்கள்

Post a Comment