(நகைச்சுவைதான் என்றாலும்... ஒரு மனிதனாக, ஒரு இக்கட்டான சமயத்தில் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள் எனத் தெரிந்து கொள்ள கேட்கப்படும் கற்பனைக் கதை இது. எனவே, வரிவரியாக கவனமாகப் படித்து பதில் சொல்லவும்)
நீங்கள் ஒரு தமிழர்.
அதிலும் 'மயக்கம் என்ன..?' தனுஷ் போல ஒரு அற்புதமான ஃபோட்டோகிராபர்.
நீங்கள் இப்போது ஒரு பத்திரிக்கை சார்பாக, கடலில் சூரியன் மறைவதைப் பார்க்க வந்திருக்கும் பிரதமரை ஃபோட்டோ எடுக்க வந்திருக்கிறீர்கள்.
கடற்கரையில் பிரதமருக்காக காத்து நிற்கும்போது ஒரு சூறாவளி அடிக்கிறது.
சூறாவளி என்றால் கடும் சூறாவளி.
நீங்கள் இப்போது அந்த சூறாவளியின் சரியான மையத்தில் நிற்கிறீர்கள்.
வீடும் மரமும் மரங்களும் கால்நடைகளும் கடல் நீரும் இப்போது உங்களைச் சுற்றி சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது.
உங்களால் இப்போது செய்யக் கூடியது ஒன்றும் இல்லை என்றாலும், இயற்கையின் பெரும்பலத்தை உணர்த்தும் அந்த அற்புதமான தருணத்தை அழகழகான ஃபோட்டோக்களாய் கேமராவில் சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறீர்கள்.
அப்போதுதான், அந்தச் சூறாவளியின் நடுவே உயிருக்காக போராடும் அந்த மனிதனைப் பார்க்கிறீர்கள்.
காற்றும் நீரும் சகதியும் அந்த மனிதனை சுழற்றி எறிய எறிய பக்கத்தில் சென்ற நீங்கள் அந்த மனிதனை எங்கோ பார்த்திருப்பதாய் உணர்கிறீர்கள்.
ஓ... அது நமது பிரதமர்.!
இப்போது உங்களுக்கு ரெண்டு வாய்ப்பு இருக்கிறது.
ஒன்று உங்கள் தேசத்தின் பிரதமர் உயிரைக் காக்கும் அரிய வாய்ப்பு.
அல்லது ஒரு பவர்ஃபுல் மனிதரின் கடைசி நிமிடத்தை ஃபோட்டோவாய் பதிவு செய்ததற்காக, ஃபோட்டோவின் ஆஸ்கார் போன்ற புலிட்சர் விருது.
இப்போது தான் நீங்கள் பதில் சொல்ல வேண்டிய தருணம்.
தயவுசெய்து இந்தக் கேள்விக்கு நியாயமான பதிலைச் சொல்லுங்கள்.
"நீங்கள் இப்போது இந்தத் தருணத்தில் இதைப் பதிவு செய்ய கலர் ஃபிலிமைத் தேர்ந்தெடுப்பீர்களா... இல்லை, காலம் கடந்து நிற்க வேண்டும் என்பதற்காக கருப்பு வெள்ளை ஃபிலிமைத் தேர்ந்தெடுப்பீர்களா.?".
.
.
.
9 comments:
PM's Secret service agents may arrest you if they read this story :-)
amas32
Will choose color to capture that colourful moment (assuming that PM is manmohan sing)
kadaisi rendu vari nach!
எனக்கு என்னவோ கலர் ஃபிலிம் தான் சரியா வரும் என்று தோணுது # சரியான முடிவுகளை சமயத்தில் எடுக்காத இந்த முக்கியமில்லாத மனிதனின் முடிவு பதிவு செய்யும் அளவும் முக்கியத்துவம் தேவையா
//நீங்கள் இப்போது இந்தத் தருணத்தில் இதைப் பதிவு செய்ய கலர் ஃபிலிமைத் தேர்ந்தெடுப்பீர்களா... இல்லை, காலம் கடந்து நிற்க வேண்டும் என்பதற்காக கருப்பு வெள்ளை ஃபிலிமைத் தேர்ந்தெடுப்பீர்களா.?//
வண்ணத்திலேயே எடுத்துக்கொள்வேன். பிறகு பிற்சேர்க்கையில் வேண்டுமானால் கருப்பு வெள்ளையாக மாற்றிக்கொள்வேன்.
முதலில் நன்றாக போட்டோ எடுத்துவிட்டு பின்பு அவரை காப்பாற்ற எண்ணுவேன்.
--- இதல்லாம் அரசியல்ல சாதாரனம்பா.... :)
Arasiyal vathy ye thevai illai
Arasiyal vathy ye thevai illai
hahaha, ultimate nakkal
Post a Comment