Monday, March 19, 2012

டாக்டர் தண்டபாணி

டாக்டர் தண்டபாணி அந்த நகரத்திலேயே ஒரு புகழ் பெற்ற ஆங்கில மருத்துவர்.

அவரை அன்று லையன்ஸ் க்ளாப் சார்பாக, ஒரு சர்க்கரை நோய் விழிப்புணர்வுக் கூட்டத்தில் பேச சிறப்பு விருந்தினராய் அழைத்திருந்தார்கள்.

தண்டபாணியும் அந்த புத்தகம் இந்தப் புத்தகம் என்று எல்லாப் புத்தகமும் பார்த்து, அற்புதமாய் ஒரு ஆறு பக்க ஆங்கில உரையை ரெடி செய்து, அதை தன் கைப்பட எழுதி எடுத்து சென்றிருந்தார்.

கூட்டம் ஆரம்பித்து, எல்லோரும் சர்க்கரை நோய் குறித்து கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு என எல்லாப் பக்கமும் அலசி ஆராய்ந்து உரையாற்றிவிட்டு அமர்ந்தார்கள்.

ஒரு அரை மணி இருக்கும்

நிகழ்ச்சி அமைப்பாளர், இப்போது டாக்டர் தண்டபாணியை பேச அழைத்தார்கள்.

தண்டபாணி புன்னகையுடன் எழுந்து சென்று, மைக்கைத் தட்டிப் பார்த்துவிட்டு, தான் கொண்டு வந்திருந்த பேசுவதற்காக உரையைப் பிரித்தார்.

கடவுளே... என்னவொரு சோதனை...?

தண்டபாணிக்கு தான் எழுதியதில் ஒரு எழுத்துகூட தனக்கே புரியவில்லை.

தொண்டையைக் கனைத்தபடி, மைக்கைத் தட்டியபடி ஒவ்வொரு பக்கமாக புரட்டுகிறார்.

ம்ஹூம்... ஒரு எழுத்து என்றால் ஒரு எழுத்து கூடப் புரியவில்லை.

வந்தவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லியபடியே, தான் எழுதியது யாருக்குப் புரியும் என்று யோசித்தவாறு பேசிய டாக்டர் தண்டபாணி... அடுத்துக் கேட்டார்.

"இந்தக் கூட்டத்துல யாராவது மெடிக்கல் ஷாப் வச்சிருக்கவங்க இருக்கீங்களா.?"
.
.
.

4 comments:

K.Arivukkarasu said...

Very good super! i enjoyed reading it !! :-)

Anonymous said...

ஹ ஹ ஹ... சூப்பர்...
உங்கள் பதிவுகளை http://www.hotlinksin.com/ இணையதளத்தில் பகிர்வதன் மூலம் ஏராளமான வாசகர்களைப் பெறலாம்.

sutha said...

கலக்கல் ... நிஜமும் கூட

தாய்மனம் said...

நல்ல இருக்கு # குறிப்பா என் எழுத்தும் இப்படி இருப்பதால் எனக்கும் இது போண்ட சங்கடம் வந்தது உண்டு # நகை சுவையாகும் இருக்கு

Post a Comment