Thursday, March 1, 2012

தில்லுதுர இன் கிரிக்கெட்

தில்லுதுர கல்லூரியில் கிரிக்கெட்டில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த காலம் அது.

அன்று ஸ்டேட் லெவல் மேட்ச்சில் அவர் காலேஜ் வெற்றி, பெற்றதற்கு அவர் கேப்டனாக இருந்ததும் முக்கிய காரணம்.

கப் அடித்ததோடு, அன்று மைதானத்தில் நடந்தது அவரை பறக்கவே வைத்துவிட்டது.

லீடிங் ஸ்போர்ட்ஸ் பத்திரிக்கையான ஸ்போர்ட்ஸ்டார் பத்திரிக்கையின் ஆசாமி ஒருவர் வந்து தில்லுதுரயிடம் சந்தோஷமாய் கைகொடுத்துப் பேசினார்.

"கலக்கலா வெளயாண்டீங்க. ஞாயித்துக் கிழமை வீட்டுல இருப்பீங்களா.? பார்க்கலாமா..?".

தில்லுதுர சந்தோஷமாய், "வாங்க சார்... எப்ப வேணா பாக்கலாம்..!" என்று அங்கேயே சொல்லி விட்டார்.

காலேஜிலும் இந்த நியூஸ் பரவி ஒரு ஹீரோவே ஆகிவிட்டார் தில்லுதுர.

ஐந்து நாட்கள்... ஞாயிற்றுக் கிழமை எப்படா வரும் என்று ஐந்து யுகமாகவே கழிந்தது தில்லுதுரக்கு.

சரியாய் ஞாயிற்றுக் கிழமை காலை பத்து மணிக்கு, தில்லுதுர வீட்டு வாசலில் வந்து நின்றது அந்த பைக்.

பைக்கிலிருந்து இறங்கிய இருவரது டி-ஷர்ட்டிலும் 'ஸ்போர்ட்ஸ்டார்' என்று சிவப்பில் எழுதியிருக்க, மிகுந்த குஷியாகிப் போனார் தில்லுதுர.

வந்தவர்களை அழைத்து ஹாலில் உட்கார வைத்து காஃபி, ஸ்நாக்ஸ் எல்லாம் கொடுத்த பின் கேட்டார் தில்லுதுர.

"அப்புறம்.... சொல்லுங்க சார்..!".

வந்தவர்களில் சிவப்பாய் குண்டாய் இருந்தவர் ஆரம்பித்தார்.

"சார்... நாங்க ஸ்போர்ட்ஸ்டார் பத்திரிக்கைலருந்து வர்றோம். ஆக்சுவலா ஒரு இஷ்யூ பன்னிரண்டு ரூபா. ஒரு வருஷம் 52 இஷ்யூக்கு நீங்க 624 ரூபா கொடுக்கணும். ஆனா, எங்ககிட்ட சப்ஸ்கிருப்ஷன்னா 350ரூபா கட்டினாப் போதும். நாப்பத்திநாலு பர்சன்ட் லாபம்.!".

சொல்லிக் கொண்டே வந்தவருக்கு தில்லுதுர ஏன் திடீரென்று மயக்கம் போட்டு விழுந்தார் என்று புரியவில்லை.
.
.
.

10 comments:

get2karthik said...

இந்த 'ஆப்'பர் எங்கேயும் கிடைக்காது

நடராஜன் said...

வழக்கமா தில்லுதுரையால தான் மத்தவங்க மயக்கம் போட்டு விழுவாங்க! இந்த முறை தில்லுதுரைக்கே மயக்கம் வந்துவிட்டது

சின்ராஸ் said...

ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது..

Nat Sriram said...

நல்லாருக்குண்ணோவ்..:)

- NattAnu

maithriim said...

சாப்பிட்ட பின் பேச்சை ஆரம்பித்த அவர்கள் சாமர்த்தியசாலிகள்! :)
amas32

Butter_cutter said...

சொந்த அனுபவம் .அப்படிதனுங்க தல

Anonymous said...

haa haaa jooperu ... kalakkureenga thala .. postum arumai .. enakku mela ulla aththana commentsum arumai by @gundubulb

sutha said...

செம காமெடி - ஆப்புக்கே ஆப்பா?

anandrajah said...

வந்தவர்களில் சிவப்பாய் குண்டாய் இருந்தவர் ஆரம்பித்தார். .. ஹாஹா.. யாரு ஆரம்பிச்சாலும் இந்த மயக்கம் தான் ...!

ட்விஸ்ட் தல..!;-))

தாய்மனம் said...

சுருக்கமா சொன்னால் நல்ல திருப்பம்

வாழ்த்துகள்

தொடருங்க இது போன்ற ஷார்ப் கிளைமாக்ஸ், கூடிய காமெடி காட்சிகளை, கொண்ட கதைகளை

Post a Comment