அன்று மிகப் பெரிய திரையில் பொதுமக்கள் ஒன்டே கிரிக்கெட் பார்க்க அந்த ஹோட்டல் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
டாஸில் ஜெயித்த இந்தியா முதலில் பேட் செய்ய ஆரம்பித்து, டெண்டுல்கர் இறங்கியிருந்ததால் கூட்டம் உள்ளே வேகவேகமாய் நுழைந்து கொண்டிருந்தது.
ஹோட்டலின் அந்த ஹாலில் நுழைபவர்களை செக் செய்து அனுப்பிக் கொண்டிருந்த அந்த செக்யூரிட்டிகளில் ஒருவர், அப்போதுதான் வாசலை கடந்து கொண்டிருந்த தில்லுதுர நாயுடன் வருவதைப் பார்த்து ஆச்சர்யத்துடன் நிறுத்தினார்.
"சார்... இது பொது மக்கள் நிறைய பேர் பார்க்க ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சி. இங்க நாயையெல்லாம் அனுமதிக்க முடியாது.!".
சொன்ன செக்யூரிட்டியைப் பார்த்து தில்லுதுர சொன்னார்.
"சார்... தயவுசெய்து என் நாயை நீங்க அனுமதிச்சே ஆகணும். என் நாய் கிரிக்கெட்னா விரும்பிப் பார்க்கும். அதுவும் டெண்டுல்கர்னா இதுக்கு உயிரு..!".
செக்யூரிட்டி இப்போது குழப்பத்துடன் தில்லுதுரயைப் பார்த்தார்.
'நாய் கிரிக்கெட் பார்க்குமா.? அதுவும் டெண்டுல்கர் எல்லாம் அதுக்கு தெரியுமா.?'.
அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, டெண்டுல்கர் ஒரு ஃபோர் அடிக்க, அதை திறந்திருந்த கதவின் வழியே பார்த்த தில்லுதுரயின் நாய் சட்டென்று இரண்டு கால்களில் எழுந்து நின்று, முன்னங்கால்களைத் தட்டி 'உய் உய்"யென்று விசில் அடிக்க... செக்யூரிட்டி அரண்டே போனார்.
"பாத்தீங்களா.?" என்று தில்லுதுர கேட்பதற்குள், டெண்டுல்கர் அடுத்த பாலில் ஒரு சிக்ஸரை விளாச, நாய் இப்போது இன்னும் உற்சாகமாகி, கைதட்டி விசிலடித்து ஒரு பல்டி வேறு போட்டது.
பார்த்துக் கொண்டிருந்த செக்யூரிட்டி ஆச்சர்யத்துடன் தில்லுதுரயைப் பார்த்துக் கேட்டார்.
"என்னங்க இது.. பயங்கர ஆச்சர்யமா இருக்கு.! டெண்டுல்கர் அடிக்கற ஃபோர் சிக்ஸுக்கே உங்க நாய் இந்த ஆட்டம் போடுதே... டெண்டுல்கர் ஒரு செஞ்சுரியப் போட்டா என்னங்க செய்யும்.?".
செக்யூரிட்டி கேட்டதும் தில்லுதுர ஒரு சுரத்தே இல்லாம பதில் சொன்னார்.
"அது என்ன பண்ணும்னுதான் தெரிய மாட்டேங்குதுங்க.! ஏன்னா, நான் இந்த நாயை வாங்கி பத்து வருசம்தான் ஆகுது.!" என்றார்.
.
.
.
12 comments:
நல்ல கற்பனை. இந்த கதையின் முடிவிலாவது சச்சின் கென்சுரி பொட்டிருக்கலாம் :)
ஹா ஹா :)))))
Hope Tendulkar's die hard fans don't read this :) nalla ezhuthiyirukeenga!
amas32
செம உள்குத்து..... சூப்பர் பதிவு...
தில்லுதுரைக்கு வர வர லொள்ளு ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு! ”லொள்”ளை வைத்து எல்லாம் லொள்ளு செய்கிறார்! :)
நல்ல கற்பனை....சச்சின்தான் பாவம்...
அருமையான கதை. இதுக்காகவே சச்சின் செஞ்சுரி போடணும் போல. ஹி ஹி. - Karuppiah_here (Twitter)
ஹிஹிஹி
அற்புதமான கற்பனை # வித்தியாசமான கற்பனை # அடிக்கடி எழுதுங்க # அசத்தலா எழுதுங்க # எங்களுக்கெல்லாம் வாசிக்கவும் பாராட்டவும் தான் தெரியும்
HA HA SEMAAAAAAAAAAA KALAKKAL BY GUNDUBULB(TWITTER)
பத்து வருசந்தான் ஆவுதா? அப்ப சரி ;p Super Boss. Media Pressure! @SeSenthilkumar (twitter)
Boss paethutinga... superu....
Post a Comment