மிக போரடிக்கிறதே என்று டேனியை கோவை வ.உ.சி. பூங்கா அழைத்துச் சென்ற ஒரு ஞாயிறு அன்று நடந்தது இது.
பூங்காவில் நான் ஓரிடத்தில் உட்கார்ந்திருக்க, டேனி அவன் வயதை ஒத்த ஐந்து ஆறு வயதுச் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.
கொஞ்ச நேரம் இருக்கும்.
வேக வேகமாய் என்னிடம் ஓடிவந்தவன், பூங்காவில் கொஞ்ச தூரம் தள்ளி அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி கேக்கறாங்க, அவங்களுக்கு கொடுக்கணும் என்று அவருக்கு தருவதற்காய் பத்து ரூபாய் கேட்டான்.
இந்த வயதிலேயே என் பையனுக்கு இவ்வளவு கருணை இருக்கிறதே, அடுத்தவர்களுக்கு உதவும் எண்ணம் இருக்கிறதே என்ற பெருமையுடன் பர்ஸைத் திறந்தவள், பத்து ரூபாயை எடுத்து கையில் கொடுத்தபடி கேட்டேன்.
"எதுக்காக டேனி அவங்களுக்கு பணம் கொடுக்கணும்னு தோணுச்சு..? அவங்கனால வேலை எதுவும் செய்ய முடியாதா..?".
கேட்ட என்னைக் குழப்பத்துடன் பார்த்த டேனி சொன்னான்.
"ஏன் முடியாது... நல்லா முடியுமே..! அவங்கதான் அங்கே மிட்டாய் வித்துகிட்டு இருக்காங்க...!" என்றான்.
.
.
.
10 comments:
ஹ ஹ ஹ ஹ ஹா
suppeer :)))
முதல் லாலிபாப்
>>"ஏன் முடியாது... நல்லா முடியுமே..! அவங்கதான் அங்கே மிட்டாய் வித்துகிட்டு இருக்காங்க...!" என்றான்.
ஹா ஹா வெச்சாம் பாரு ஆப்பு
ஹா ஹா .. உண்மைலேயே ரொம்ப கருணை உள்ளவன்தான்.. 225 க்கு வாழ்த்துக்கள் அண்ணா :-)
சூப்பர்! நல்லா இருக்கார் டேனி!:-)
குழந்தைகளிடம் உண்டான இயல்பு தவறாக புரிந்து கொள்வது பெரியவர் மரபு
நம் குழந்தைகள் நம்மைப் போலல்லவ இருக்கும் !!! ஹி ஹி ஹி
டேனி கிட்ட டியூஷன் தான் போகணும்க நாம
i cant stop my laugh
Post a Comment