டேனியின் பள்ளியில் விடுமுறை விட்டு பதினைந்து நாட்களாகிவிட்டது.
இந்த விடுமுறை நாட்களில் பாடம் மறந்துவிடாமல் இருக்க, சின்னச் சின்னக் கணக்குகளும், மூன்றெழுத்து நான்கெழுத்து தமிழ் வார்த்தைகளும் எழுதப் படிக்கப் பழக்கச் சொல்லியிருந்தார்கள்.
அந்த முறையில் இன்று தமிழைக் கையில் எடுத்திருந்தேன்.
’படம், பாடம், உப்பு, தப்பு’ என மூன்றெழுத்து தமிழ் வார்த்தைகளை எழுதப் பழக்குவது என்ற முடிவுடன் உட்கார்ந்தாகிவிட்டது.
விடுமுறையிலும் எழுதப் படிக்கச் சொல்கிறார்களே என்ற கடுப்புடன் அமர்ந்த டேனி, தமிழ் என்றதும் கடுப்பின் உச்சத்துக்கே போய்விட்டான்.
படிப்பது ஆங்கில மீடியம் என்பதால் தமிழ் சரியாய் வராது என்பதும், தமிழ் என்றால் ஹோம்வொர்க் முடிய நேரம் அதிகமாகி விளையாடச் செல்வது தாமதமாகும் என்பதும்தான் காரணம்.
முதலில் படம், அடுத்து பாடம் என்னும் வார்த்தைகளை தப்பும் தவறுமாய் எழுதி என்னைக் கொஞ்ச நேரம் வெறுப்பேற்றிய பிறகு சரியாய் எழுதியவன், பிறகு உப்பு என்னும் வார்த்தையை தவறின்றி எழுதிவிட்டான்.
அடுத்த வார்த்தை ”தப்பு”.
டேனியிடம் திரும்பி, “நாலாவதா எழுத வேண்டிய வார்த்தை ’தப்பு”. எங்க எழுது பார்க்கலாம்... தப்பு.!”.
சொன்னதும் டேனி கர்ம சிரத்தையாய் குனிந்து தனது ஹோம்வொர்க் நோட்டில் எழுதினான்.
“ட... ப்... பு..!”
எழுதிவிட்டு நிமிர்ந்து பார்த்தவன், “கரெக்ட்டானு பாரும்மா.!” என்று நோட்டை என்னிடம் நீட்டினான்.
பார்த்ததும் லேசான கோபத்துடன், அவனுக்குப் புரியட்டும் என்பதற்காக சற்று அழுத்தமாய்ச் சொன்னேன்.
“டேனி... நீ எழுதியிருக்கிறது தப்புடா.!”.
நான் சொன்னதும் தனது ஹோம்வொர்க் நோட்டைத் திருப்பி ஒருமுறை பார்த்த டேனி, எந்தச் சலனமும் இல்லாமல் என்னைப் பார்த்துச் சொன்னான்.
“ஆமா... அதைத்தான நீ எழுதச் சொன்ன.!”.
.

6 comments:
:-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
Ha ha :-D
simple and cute
குழந்தைகளின் உலகிற்கு நாம் செல்லும்போது பலநேரங்களில் வாயடைத்துப்போகிறோம்!
காரணம்: பதில் தெரிவதில்லை! சொல்ல தெரியவில்லை! சூழ்நிலையை தவிர்க்கவும் முடியவில்லை!
அவ்
ஹா ஹா ஹா.. செம..😂😂
Post a Comment