அன்று தில்லுதுர மனைவிக்கு பிறந்த நாள்.
சாயங்காலம் வந்து வெளியே எங்கேயாவது கூட்டிச் செல்கிறேன் என்று சொல்லிச் சென்ற தில்லுதுர, இரவு பதினோரு மணியாகியும் வீடு வந்து சேரவில்லை.
காத்திருந்து காத்திருந்து வெறுத்துப் போன மனைவி கடுப்புடன் அவருக்கு ஃபோன் செய்தாள்.
மறுமுனையில் தில்லுதுர ஃபோனை எடுத்ததும், கடுப்பும் வெறுப்பும் உமிழ கோபமாய்க் கேட்டாள்.
"எங்க போய்த் தொலைஞ்சீங்க இந்நேரம் வரைக்கும்.?".
மறுமுனையில் அன்பும் காதலும் வழிய தில்லுதுரயின் குரல் கேட்டது.
"செல்லம்... உனக்கு ஞாபகம் இருக்கா.? அன்னிக்கு ஒருநாள் ஒரு நகைக் கடையில ஒரு வைர நெக்லஸை பாத்துட்டு ஆசையோட கேட்டியே... எங்கிட்ட கூட அன்னிக்கு பணம் இல்லாம இருந்தது. ஆனாலும் அப்ப உங்கிட்டச் சொன்னேனே.... இந்த வைர நெக்லஸ் கண்டிப்பா ஒருநாள் உன் கழுத்துல கிடக்கும்னு.... உனக்கு ஞாபகம் இருக்கா..?".
தில்லுதுரயின் மனைவியின் கோபம் இப்போது காணாமல் போயிருந்தது.
அதே காதலும் புன்னகையும் வழிய ஃபோனில் பதில் சொன்னாள்.
"அதெப்படிங்க மறப்பேன்... நல்லா ஞாபகம் இருக்கு.!".
மனைவி சொன்னதும் தில்லுதுர அதே அன்புடன் தொடர்ந்து சொன்னார்.
"அந்த நகைக்கடைக்கு பக்கத்து இருக்கற டீக்கடையிலதான் இப்ப என் ஃபிரண்ட் ராஜாகூட டீ சாப்டுட்டு இருக்கேன்...!".
.
.
.
13 comments:
டீ சாப்ட்டு வீட்டுக்குத்தானே போகணும்........ ஹிஹி
அட்ரா.. அட்ரா.. அட்ராசக்கை.. குரு கலக்கிட்டீங்க..
அருமை
தம்பி டீ இன்னும் வரல
semaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
:)))))))))))))
தில்லுதொற இந்நேரம் உயிரோட இருப்பான்னு நினைக்குறீங்க?
You have used super psychology! ROFL :)
amas32
தில்லுதுர rocks ! :-))
இவ்வளவு ஆப்புக்கு அப்புறம் ஒரு சூப்பா??
எங்கேயோ கேட்ட கதை ......
:))))))))))))
ஹா ஹா :)))))))))))))))
Post a Comment