Saturday, March 3, 2012

பரிணாம வளர்ச்சி

ஐந்து வயது டேனி, அன்று வகுப்பிலிருந்து வந்ததும் என்னிடம் ஓடி வந்தான்.

"அம்மா மனிதர்கள் இந்த உலகத்தில் எப்படி வந்தார்கள்னு வீட்டுல கேட்டுட்டு வரணும்னு டீச்சர் சொல்லிருக்காங்க. சொல்லுங்கம்மா... எப்படி வந்தாங்க..?"

ஏதாவது அறிவியல் வகுப்பாய் இருக்கும் என்று யோசித்தபடியே, "ரொம்ப காலத்துக்கு முன்னாடி இருந்த குரங்குகள்லருந்து மனுசங்க வந்தாங்க..!" என்று சொன்ன நான் அது எப்படி என்றும் தொடர்ந்து சொன்னேன்.

ஓரளவு புரிந்துகொண்ட பின் விளையாட ஒட்டிய டேனி, அவன் அப்பா ஆஃபிஸிலிருந்து வருவதைப் பார்த்ததும் ஓடி வந்தான்.

வந்தவன் அலுப்புடன் ஷூ கழற்றிக் கொண்டிருந்தவரிடம் நேராய்க் கேட்டான்.

"அப்பா... அப்பா... மனுசங்க எப்படிப்பா இந்த பூமிக்கு வந்தாங்க..?".

பாடம் சம்பந்தப்பட்ட விஷயம் என்று தெரியாததால் அவர் லேசான கடுப்புடன், " அதுவா... முதல்ல கடவுள் ஆதாம் ஏவாளை பூமியில படைச்சாரு. அப்பறம் அவங்க குழந்தைங்க... அதுக்கப்புறம் அவங்க குழந்தைங்கனு நெறய மனுசங்க பூமிக்கு வந்தாங்க...!".

என் கணவர் சொன்னதும், குழப்பமாகிப் போன டேனி அப்பாவிடம் மறுபடி கேட்டான்.

"என்னப்பா நீ இப்படி சொல்ற.? அம்மா குரங்குகள்லருந்துதான் மனுசங்க வந்ததா சொல்றாங்க...!".

டேனி கேட்டதும், தன் அலுப்பெல்லாம் தீர்ந்ததுபோல் சிரித்தபடி அவர் சொன்னார்.

"ஓ அதுவா... அது அப்படித்தான்..! ஏன்னா, அம்மா அவங்க சைடு மனுசங்களைப் பத்தி உனக்கு சொன்னாங்க... நான் என் சைடு மனுசங்களைப் பத்தி சொன்னேன்..!" என்றார்.

அதற்கப்புறம் அவர் காஃபி கிடைக்காமல் கடைக்கு போனது தனிக்கதை.
.
.
.

6 comments:

sutha said...

என்ன - அத்தோடு விட்டுட்டாங்களா? ரொம்ப நல்லவங்க போல இருக்கு : ))

Mohamed Mydeen said...

ஹா ஹா நல்லா இருக்கு

தல தளபதி said...

ஹி ஹி.. சாருக்கு காபி கெடச்சிதா? :-)

jeganjeeva said...

ராத்திரி சோறும் கிடச்சிருக்காதே! :))) அண்ணே உங்க அனுபவ நகைச்சுவை அருமை.

VINOTH said...

நன்றாக உள்ளது.மனிதர்கள் அனைவரும் ஆதாம் ஏவல்க்கு பிறந்து இருந்தால் நாம் அனைவரும் சகோதர சகோர்திரிகளே எப்படி நாங்களும் யோசிப்போம்ல !

தாய்மனம் said...

சிரித்து சிரித்து வயறு புண்ணா போய் வைத்தியம் செய்து கொண்டேன் # மருத்துவபில்லை அனுப்பஉள்ளேன்

Post a Comment