அந்த மருத்துவமனையில் அன்று மூன்று குழந்தைகள் பிறந்தன.
ஒன்று விருந்தினராய் வந்திருந்த சிங்களப் பெண்ணுக்கும், ஒன்று அகதியாய் வந்திருந்த ஈழத் தமிழ் பெண்ணுக்கும், மற்றொன்று தமிழகத்தை சார்ந்த மத்திய கட்சி அரசியல்வாதியின் மனைவிக்குமாய் மொத்தம் மூன்று குழந்தைகள்.
ஆச்சர்யமான ஆச்சர்யமாய்... ஒரே நாளில், ஒரே நேரத்தில், ஒரே அறையில், கிட்டத்தட்ட ஒரே எடையில் பிறந்தன அந்த மூன்று குழந்தைகளும்.
அந்த ஆச்சர்யமே ஒரு பெரிய குழப்பத்தையும் உண்டாக்கி விட்டது மருத்துவமனையில்.
குழந்தைகளை குளிப்பாட்ட அறைக்குள் எடுத்துச்சென்ற நர்ஸ், பதட்டத்தில் குழந்தைகளை இடம் மாற்றி வைத்துவிட, இப்போது யார் குழந்தை யாருடையது என்று அடையாளம் தெரியாமல் போய்விட்டது.
கவலையுடன் நர்ஸ் விஷயத்தை டாக்டரிடம் சொல்ல, டாக்டரும் என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தைகளின் தந்தையரை அழைத்து விஷயத்தைச் சொன்னார்.
விஷயத்தைக் கேட்ட மற்றவர்களும் குழப்பமடைய, ஈழத்தமிழ்க் குழந்தையின் தந்தை மட்டும் புன்னகைத்தவாறு சொன்னார்.
"அந்த மூணு குழந்தையையும் இந்த டேபிள்ல கொண்டு வந்து படுக்க வைங்க... கண்டுபிடிச்சிடலாம்..!".
சொன்னதுபோல், வரிசையாய் குழந்தைகளை கொண்டு வந்து டேபிளில் படுக்க வைத்ததும், அந்த ஈழத்தமிழர் சப்தமாய், "ஜெய் டைகர்...!" என்று குரல் கொடுத்தார்.
டைகர் என்ற சப்தம் கேட்டதுதான் மாயம்.
ஈழத்தமிழ்க் குழந்தை கையை உயர்த்தி சல்யூட் அடிக்க, சிங்களக் குழந்தை மூச்சா கக்காவே போய்விட்டது.
ஆனால், மத்திய அரசியல்வாதியின் குழந்தையோ எந்தக் கவலையும் இன்றி குஷியாய், அந்த மூச்சா கக்காவில் கையால் டப்டப்பென்று அடித்து, அது மூஞ்சியில் தெறிக்க விளையாட ஆரம்பித்திருந்தது.
.
.
.
22 comments:
நெத்தியடி! வாழ்த்துகள்.
amas32
கதை அல்ல உண்மை!
ஜெய் டைகர் என இந்தியில் சொல்லாமல் தமிழில் சொன்னனால் நல்லா இருந்துருக்கும்
”ஜெய் டைகர்” செம பஞ்ச்! :)
Gr8888888888888
அட்டகாசம்
இழந்த சொர்க்கம் மீண்ட சொர்க்கமாகுமா?
அருமை
சூப்பா்ண்ணா;-)
நம் சோகத்தை தற்காலிகமாக மறைக்க இந்த நகைச்சுவை உதவுகிறது. அருமையான கற்பனை. :)
இந்த தருணத்தையும் நகைச்சுவையுணர்வோட சொன்னது அழகு.
குழந்தைக்கு கூட உண்மை தெரியுமா என்ன?
செம !!!
அருமை :-)
i thought the other child was shouted jai sinhaya..........
நகைச்சுவையும், யதார்த்தமும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட அழகான கற்பனை. பேஸ் பேஸ் ரொம்ப நன்னாயிருக்கு.
//அந்த மூச்சா கக்காவில் கையால் டப்டப்பென்று அடித்து, அது மூஞ்சியில் தெறிக்க விளையாட ஆரம்பித்திருந்தது.//
சூப்பர்!
தனுஷ் ... எப்படி என்று தெரியாததால் எனக்கு அந்த பகுதி புரியலை.
"ஜெய்டைகர்" இதில் ஏதோ உள்குத்து இருக்கு போல
பாதி புரிந்தாலும் புரிந்த வரையில் நல்லா இருக்கு
hahaha, ultimate!
super.
அண்ணா செம... அந்த மூணு குழந்தையில நம்ம நாட்டு குழந்தை தான் மனசுல பதியிது..
கற்பனை நிஜமாகட்டும்...!
கற்பனை நிஜமாகட்டும்...!
Post a Comment