Wednesday, February 22, 2012

வயதைக் கண்டுபிடிப்பது எப்படி.?


அன்று மாலை அலுவலகம் விட்டு வந்ததும் என் நான்கு வயது மகன் டேனியுடன் விளையாடாமல், ஏதோ ஒரு அப்ளிகேசனை நிரப்பும் பணியை கவனமாய் செய்து கொண்டிருந்தார் என் கணவர்.

அந்த வேலை முடிந்ததும் அவர் எப்படியும் விளையாட வருவார் என்ற நம்பிக்கையோடு, கையில் பேட்டும் பந்துமாய் அவர் எழுதும் டேபிளுக்கு அருகிலேயே விளையாடிக் கொண்டிருந்தான் டேனி.

அப்ளிகேஷனை நிரப்பிக் கொண்டே வந்தவர் திடீரென்று என்னை அழைத்தார்.

"கொஞ்சம் கால்குலேட்டரை எடுத்துட்டு வர்றியா..?"

அடுக்களையில் வேலையாய் இருந்த நான், "அப்ளிகேஷன் ஃபில் பண்ண கால்குலேட்டர் எதுக்குங்க..?" என்று கேட்க கடுப்புடன் பதில் சொன்னார் அவர்.

"இந்த மாசம் மொதத் தேதி அன்னிக்கு என் வயசு என்னனு கேட்டிருக்கான். அதை கழிச்சுப் பாக்கணும், அதுக்குத்தான்...!".

அவர் பேசுவதை கவனித்தபடியே விளையாடிக் கொண்டிருந்த டேனி சட்டென்று கேட்டான்.

"அப்பா... உன் வயசு தெரியணும்னா ஒரு ஈஸியான வழி இருக்கு, சொல்லட்டா.?"

ஆவலுடன் நிமிர்ந்த அவர் கேட்டார்.

"என்னது... சொல்லு சொல்லு..!".

அவர் கேட்டதும் டேனி சொன்னான்.

"உன்னோட பனியன், பின்னால உள்பக்கமா பாத்தா கண்டுபுடிச்சுடலாம்..!".

அவன் சொன்னதும் குழப்பமாகிப் போன என் கணவர் புரியாமல் அவனிடமே கேட்டார்.

"அதெப்படிடா... பனியன் உள்பக்கம் பாத்தா வயசு தெரியும்..?".

அவர் கேட்டதும் டேனி இன்னும் அழகாய் விளக்கும் விதமாய் சொன்னான்.

"ஆமாப்பா... வேணும்னா என் பனியனைப் பாரேன். உள்ளே ஃபோர் இயர்ஸ், ஃபைவ் இயர்ஸ்னு போட்டிருக்கு...!" என்றான்.
.
.
.

7 comments:

Saravana kumar said...

பாஸ் டேனி ஒரு வில்லேஜ் விங்ஞானி

Unknown said...

ஹி ஹி. சூப்பரு. வழக்கம்போல அருமை.

இராஜராஜேஸ்வரி said...

டேனி இன்னும் அழகாய் விளக்கும் விதமாய் சொன்னான்./

அழகான பகிர்வு...

sasi said...

Nanru nanri

Unknown said...

Nice

தாய்மனம் said...

எளிய, இயல்பான, லேசான, நகைசுவை என்பதை எல்லோராரும் எழுத முடியாது # அது நம்மை சுற்றியே நடந்தாலும் உணர்வதும் மிக குறைவு # நீங்க இங்கே தாரிங்க வாழ்க # தொடர்க உங்கள் சேவையை

Saravanan said...

ha..ha.. nice one

Post a Comment