Tuesday, February 14, 2012

தில்லுதுரயும் வாலன்டைன்ஸ் டே-யும்

அன்று பிப்ரவரி 14ம் தேதி என்று ஞாபகமே இல்லாமல் தான் போஸ்ட் ஆஃபிஸுக்குள் ஏதோ வேலையாய் நுழைந்தார் தில்லுதுர.

தன்னுடைய கடிதத்துக்கான ஸ்டாம்பை ஒட்ட, பசை இருக்கும் இடத்தை நெருங்கும் போதுதான் அந்த நபரைக் கவனித்தார்.

கிட்டத்தட்ட ஒரு நாற்பத்தைந்து வயதிருக்கும் அந்த ஆளுக்கு.

நல்ல சிவப்பு... ஓரளவு முடி கொட்டி முன்மண்டை முழுவதும் கிரவுண்ட் வாங்கியிருந்தது.

கையில் குறைந்தது நல்ல பளபளக்கும் பிங்க் கலரில் ஒரு கவர்.. அதில் பளிச்சென்று கண்ணைப் பறிக்கும் சிவப்பில் ஒரு இதயத்தின் படம்.

அந்த ஆள் ஸ்டாம்பை அந்த இதயத்தின் மீது படாமல் பக்காவாய் ஒட்டி, கவரைத் திறந்து கையிலிருந்த சென்ட் பாட்டிலைத் திறந்து உள்ளே பளீரென்று ஸ்ப்ரே செய்து கவரை ஒட்டிக் கொண்டிருந்தார்.

ஆச்சர்யத்துடன் அதையே பார்த்துக் கொண்டிருந்த தில்லுதுர அவரிடம் கேட்டார்.

"பாக்கவே சந்தோஷமா இருக்கு. உங்களுக்கு உங்க ஆள் மேல உங்களுக்கு இவ்வளவு பிரியமா..?".
தில்லுதுர கேட்டதும் அவர் அலுத்துக் கொண்டே பதில் சொன்னார்.

"அட... இது ஒரு ஆம்பளைக்குங்க...!"

தில்லுதுர லேசான கலவரத்துடன் கேட்டார்.

"ஆம்பளைக்கா... ஏன்.?"

அந்த சொட்டை நபர் சிர்த்தபடி பக்கத்திலிருந்த பேக்கை திறந்து காட்டியபடி சொன்னார்.

"இது ஒண்ணு மட்டுமில்ல... இதே மாதிரி இன்னும் ஆயிரம் கவர் இருக்கு. எங்க பாஸ் சொன்னபடி அனுப்பிக்கிட்டு இருக்கேன்.!"

தில்லுதுர குழப்பத்துடன் வாழ்த்து அனுப்பும் இடத்தில் யார் அனுப்புகிறார் என்பதைப் பார்த்தார்.

அந்த இடத்தில் பெயர் எழுதாமல் வெறுமனே "கெஸ் ஹூ.?" என்று மட்டும் இருந்தது.
பார்த்த தில்லுதுர இன்னும் கடுப்பு அதிகமாகி அவரிடம் கேட்டார்.

"ஏம்பா... யாருன்னு பேரு எழுதாம மொட்டையாப் போடறீங்களே, இதை அவரு பாக்காம வீட்டுல யாராவது பாத்தா அங்க குழப்பந்தான உண்டாகும்.?"

அவர் சிரித்தபடி சொன்னார்.

"ஆமா சார்... அதுதான வேணும்..!".

சொன்ன சொட்டை நபரைப் பார்த்த தில்லுதுர கோபாமாய்க் கேட்டார்.

"அதானால உங்களுக்கு என்னப்பா லாபம்.?"

அப்போதும் அந்த சொட்டை நபர் அசராமல் சொன்னார்.

"இருக்கே... எங்க பாஸ்தான இந்த ஊர்லயே பெரிய டைவர்ஸ் லாயர்..!" என்றான்.
.
.
.

5 comments:

sutha said...

ஹா ஹா - நல்லா தான் டெவெலப் பண்ணறாரு பிசினஸெ : ))

'பரிவை' சே.குமார் said...

அது சரி..

maithriim said...

என்ன ஒரு கிரிமினல் புத்தி! லாயருக்கு இல்லை, எழுதியவருக்கு :)))
amas32

Sridhar said...

//லேனா தமிழ்வாணனின் ஒரு பக்கக் கட்டுரைகள் லிங்க் கிடைக்குமா எங்காவது.?///

http://www.tamilvanan.com/content/

தட்சிணாமூர்த்தி said...

எப்படி தல உங்களால மட்டும் இப்படி முடியுது. தினசரி அனுபவங்களை கதையா மாத்துறதுல உங்களுக்கு நிகர் நீங்கதான்.…

நல்ல ரசனையான பதிவு தல.….

தல ! தில்லுதுர க்கு ஒரு படம் போடுங்க தல.….

உங்கள் சாயலில் ஒரு சிறுகதை எழுதப்போறேன் விரைவில்.…

Post a Comment