இரண்டாம் வகுப்பு படிக்கும் டேனி அன்று பள்ளியிலிருந்து வந்ததும் அவன் அப்பாவிடம் ஆச்சர்யமாய் ஓடினான்.
"அப்பா... இன்னிக்கு எங்க க்ளாஸ்ல ராம் லக்ஷ்மண்னு புதுசா ரெண்டு ஸ்டூடண்ட்ஸ் வந்திருக்காங்க. அவங்க ரெண்டு பேரும் பாக்க அப்டியே ஒரே மாதிரி இருக்காங்க தெரியுமா?".
"அப்பிடியா.?" ஆச்சர்யமாய் கேட்ட அவன் அப்பா, ஒரு புதிய வார்த்தையை டேனிக்கு கற்றுக் கொடுக்கும் ஆர்வத்துடன், "அவங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருந்தா அவங்க ரெண்டு பேரும் ட்வின்ஸா இருப்பாங்க..!" என்றார்.
"ஓஹோ... அப்படி இருந்தா அவங்க ட்வின்ஸா.?" என்று ஆர்வத்துடன் கேட்ட டேனி விளையாட ஓடிவிட்டான்.
ஆனால், மறுநாள் பள்ளி விட்டு வந்ததும், அதைவிட ஆச்சர்யத்துடன் அவன் அப்பாவிடம் ஓடியவன் கண்களை விரித்தபடி சொன்னான்.
"அப்பா விசயம் தெரியுமா...? நான் அந்த ராம் லக்ஷ்மண் கிட்ட கேட்டேன். அவங்க நீ சொன்ன மாதிரி ட்வின்ஸ் மட்டுமில்ல... அவங்க ரெண்டு பேரும் அண்ணன் தம்பியும் கூடவாம்...!" என்றான்.
.
.
.
7 comments:
கொய்யால! டேனி மட்டும் வளர்ந்து கதை எழுத ஆரமிச்சாரு செத்தாங்க! :)
very cute and funny
கிர்ர்ர் .. அப்பனை விட புள்ளை மோசமா இருக்கும் போல..!
அருமை. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
செம கடி....
ஹாஹ்ஹா நல்லாருக்கு :-):-):-)
நல்ல எதிர்காலம் இருக்கு டேனிக்கு
Post a Comment