Tuesday, May 3, 2011

டேனியின் கையில் கேக்




டேனியின் கையில் அவ்வளவு பெரிய கேக் துண்டைப் பார்த்ததுமே உயிரே போய்விட்டது எனக்கு.

டேனியின் க்ளாஸ்மேட் அச்சுத்துக்கு இன்று பர்த்டே..!

டேனியை அழைத்துக் கொண்டு போகவே முதலில் பயமாயிருந்தது.

டேனிக்கு பூச்சிப்பல் இருக்குமோ என்ற ஒரு சந்தேகம் வெகுநாளாய் இருந்ததும், தகுந்தாற்போல் அவனும் அவ்வப்போது பல்வலி என்று சொல்லிக் கொண்டே இருப்பதுமே காரணம் அதற்கு.

வேலைப் பளுவால் டேனியை டாக்டரிடம் அழைத்துச் செல்வதும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

இந்த நிலையில் இங்கே வந்து சாக்லெட், கேக் என தின்று தொலைத்தான் என்றால் அந்தத் தலைவலி வேறு வந்துவிடுமே என்று பயந்து கொண்டிருந்தேன்... அது நடந்தே விட்டது.

எனவே, டேனியை தனியாய் கூப்பிட்டு, தணிந்த குரலில் ஆனால் மிரட்டும் தொனியில் சொன்னேன்.

"டேனி... இந்த ஒரு கேக்கோட போதும். அச்சுத்தோட அம்மாகிட்டயோ அப்பாகிட்டயோ இன்னொரு கேக் வேணும்னு கேட்கக் கூடாது. என்ன..?".

நான் பேசி முடித்ததும் பரிதாபமாய் என்னைப் பார்த்த டேனி சொன்னான்.

"இல்லம்மா... ஆனா, இந்த கேக்கை அச்சுத்தோட அம்மா வீட்டுலயே செஞ்சதுன்னு ஒரு ஆன்ட்டிகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நான் உடனே, 'கேக் சூப்பரா இருக்கு ஆன்ட்டி.. எப்படி செய்யணும்னு எங்க அம்மாவுக்கு கொஞ்சம் சொல்லிக் குடுக்கறீங்களானு கேட்டேன்..!'. அதுக்கு அவங்க சிரிச்சுக்கிட்டே நான் கேக்காமயே ரெண்டு பெரிய கேக் துண்டை கொடுத்திட்டாங்களே...!" என்றான்.
.
.
.

8 comments:

உமா கிருஷ்ணமூர்த்தி said...

கேக் குழந்தை சாப்பிடட்டும் என்றா அல்லது அவங்க அம்மாக்கு தெரியாது ன்னு சொல்லிக்கொடுக்க சொன்ன பூரிப்பா ?இயல்பான குணம் ...வெளித்தெரியும் படியான பதிவு

Mohamed Faaique said...

பார்ர்ரா.............
இப்படியெல்லாம் ஐடியா இருக்கா... சின்னப் பய சொல்லித்தான் தெரிஞ்சிக்க வேண்டி இருக்கு...

செல்வா said...

அவுங்க கிட்ட கேட்டாதானே திட்டுவீங்க , அவுங்கதான் ஏற்கெனவே குடுத்திட்டான்களே ! இப்ப எப்படி திட்டுவீங்க ? ஹி ஹி

துளசி கோபால் said...

ஹாஹா............ அப்டிப்போடு டேனி:-)))))

இராஜராஜேஸ்வரி said...

குழந்தையின் குணம்...

Shankar said...

Ippaellam kozhandaigal rombave ushar partynga

இராம்குமார் said...

sonnavidham arumai.

'பரிவை' சே.குமார் said...

அப்டிப்போடு.

Post a Comment