கம்பெனி தான் வாங்கியிருந்த நிலங்களில் நவீன விவ்சாயம் பற்றி கற்று வருவதற்காக தில்லுதுரயை ஆஸ்த்திரேலியா அனுப்ப முடிவு செய்தது.
போவதற்கு முன்னரே எல்லோரும், 'ஆஸ்த்திரேலியர்கள் அடுத்த நாட்டவரை மதிப்பதில் சற்று கம்மியானவர்கள். அதனால், அவர்கள் எப்போது எது பற்றிப் பேசினாலும் அதைவிட பெரியதாய் நம் நாட்டில் இருப்பதைப்போல் பேசிவிடு. அப்போதுதான் உன்னை மதிப்பார்கள்..!' என்று ஏற்றிவிட, தில்லுதுர அதே மனதுடன் அங்கே வந்திறங்கினார்.
முதல்நாள் விவசாய நிலத்துக்கு தில்லுதுரயைக் கூட்டிப்போன ஆஸ்த்திரேலியர் அவரிடம் உழுவதற்கு உதவும் உயர்ரக காளை மாடுகளை காட்டினார்.
மாடுகளைப் பற்றி அவர் சொல்ல ஆரம்பித்ததும் தில்லுதுர கேட்டார்.
"என்ன மாடுகள் இவ்ளோ சின்னதா இருக்கு.? எங்க ஊரு மாடுக எவ்வளவு பெருசா இருக்கும் தெரியுமா..? இதைப்போல ரெண்டு மடங்கு சைஸ் இருக்கும்..!".
இந்தியாவைப் பற்றி முழுவதும் தெரிந்த அந்த ஆஸ்த்திரேலியர் கடுப்புடன் தில்லுதுரயை பார்த்துவிட்டு, ஒன்றும் பேசாமல் அடுத்த ஏரியாவுக்கு கூட்டிச் சென்றார்.
அங்கே வயல்வெளிகளில் பயணிக்க உதவும் குதிரைகளை காட்டினார்.
குதிரைகள் ஒவ்வொன்றும் அரேபியப் போர்க்குதிரைகள் போல மினிமினுவென்று உயர உயரமாய் நின்று கொண்டிருக்க, தில்லுதுர அசராமல் அவரிடம் கேட்டார்.
"என்ன குதிரை எல்லாம் இவ்ளோ சோப்ளாங்கியா இருக்கு.? எங்க ஊரு குதிரைகள் எல்லாம் என்ன சைஸ்ல இருக்கும் தெரியுமா.? இது மாதிரி ரெண்டு மடங்கு சைஸ்ல இருக்கும்..!".
கடுப்பாகிப் போன அந்த ஆஸ்த்திரேலியர், "அப்படியா..?" என்று மட்டும் கேட்டுவிட்டு அடுத்த வயலுக்கு கூட்டிப் போனார்.
போகும் வழியில், திறந்த வெளிகளில் ஓடிச் செல்லும் கங்காருக்களைப் பார்த்த தில்லுதுர அந்த ஆஸ்த்திரேலியரிடம் கேட்டார்.
"இது என்னது பாஸ் புதுசா இருக்கு..?".
கொஞ்சம்கூட எந்த உணர்ச்சியும் முகத்தில் காட்டாமல் திரும்பிய அந்த ஆஸ்த்திரேலியர் ,தில்லுதுரயிடம் கேட்டார்.
"ஏம்பா... இந்தியால நீ வெட்டுக்கிளியை பார்த்ததே இல்லியா..?".
5 comments:
"இது என்னது பாஸ் புதுசா இருக்கு..?".//
Interesting.
soooper
அருமை
துறைக்கு செம வெட்டு !
Super Boss
Post a Comment