ஜேக்கப் ஒரு கெமிக்கல் சைன்டிஸ்ட்.
எந்நேரமும் ஆராய்ச்சி, ஆராய்ச்சி, ஆராய்ச்சிதான் அவருக்கு.
எந்திரன் விஞ்ஞானி ரஜினி போல் எப்போதும் லேப்பிலேயே வாழும் ஆள் அவர்.
நிறைய அவார்டெல்லாம் வாங்கியிருக்கிறார் அந்தத் கெமிக்கல் துறையில்.
அன்றும் அப்படித்தான்... உடம்பில் ஏதோ அசௌகரியமாய் உணர்ந்த அவர், மெல்ல பக்கத்திலிருந்த மெடிக்கல் ஷாப்பை நோக்கி நடந்து போய் அங்கிருந்த ஃபார்மசிஸ்ட்டிடம் யோசனையுடன் கேட்டார்.
"தம்பி... உங்ககிட்ட இந்த அசிட்டிலலிசிலிக் ஆசிட் இருக்கா..?".
ஒரு விநாடி குழப்பமாய் அவரைப் பார்த்த ஃபார்மசிஸ்ட், திருமப அவரிடம் கேட்டார்.
"நீங்க ஆஸ்ப்ரினையா கேக்கறீங்க..?".
சற்றே யோசித்த ஜேக்கப் புன்னகைத்தபடி சொன்னார்.
"கரெக்டா சொன்ன... எனக்கு அந்த வார்த்தையே ஞாபகம் வர மாட்டேங்குது..!".
.
.
.
12 comments:
நல்லாயிருக்கு.....
அய் மொத ஆளு நானு...
நல்ல வேல தண்ணீருக்கு H2O குடுன்னு கேக்கல..
:))))
ஹி ஹி ஹி .. இதுக்குத்தான் அதிகமா ஆராய்ச்சி பண்ண கூடாதுன்னு சொல்லுறது ..
இவர் ஆராய்ச்சி பண்ண மருந்து எதையும் சாப்பிட்டுடாதீங்க ரணகளம் ஆகிடும் :)
ஊரோடு ஒத்து வாழ்....ங்கறது இதுதானோ ?
//அசிட்டிலலிசிலிக் ஆசிட் இருக்கா..?//ஹா ஹா ஹா
//அசிட்டிலலிசிலிக் ஆசிட் இருக்கா//ஹா ஹா ஹா...
"acetyl salicylic acid" is the correct term.
///அய் மொத ஆளு நானு...
நல்ல வேல தண்ணீருக்கு H2O குடுன்னு கேக்கல..////
ஹி...ஹி...ஹி.... அண்ணன் எப்பவுமே டாப்பு
அறிவாளி ன்னா சும்மாவா .....
பாவம் அவரே கன்பீஸ் ஆய்ட்டாரு
Post a Comment