தில்லுதுர அப்போதுதான் அந்தப் பெரிய ஃபோர்ட் என்டேவர் காரை வாங்கியிருந்தார்.
மாருதியை ஓட்டிக் கொண்டிருந்தவருக்கு, இவ்வளவு பெரிய வண்டியை ஓட்டுவதற்கு என்னவோ போலிருந்தது.
எட்டி எட்டி முன்னால் பார்த்தபடியே ஓட்டிக் கொண்டிருந்தவருக்கு, அன்று மாலையே அந்த வினை வந்து சேர்ந்தது.
ஒரு காஃபி சாப்பிடலாம் என்று புது வண்டியை எடுத்துக் கொண்டு பெருமையாய் ஹோட்டலுக்கு வந்தவர், வண்டியைப் பார்க் செய்யும் போது அங்கே நின்று கொண்டிருந்த வண்டியை இடித்து விட்டார்.
புது வண்டியில் லேசாய் ஒடுக்கு விழுந்துவிட்டாலும், செலவை இன்ஸ்யூரன்ஸில் வாங்கிவிடலாம் என்று, இன்ஸ்யூரன்ஸ் அலுவலகத்திற்கு வந்து கிளெய்ம் ரிப்போர்ட் வாங்கி அதை நிரப்பிக் கொண்டிருந்தார்.
க்ளெய்ம் ரிப்போர்ட்டில், 'இந்த ஆக்ஸிடென்ட்டைத் தவிர்க்க எதிராளி என்ன செய்திருக்கலாம் என்று கூற விரும்புகிறீர்கள்..?' என்றொரு கேள்வி இருந்தது.
ஒரு கணம் யோசித்த தில்லுதுர எழுதினார்.
"அவன், அவனோட வண்டியை வேற எங்கயாவது நிறுத்தியிருக்கலாம்..!".
.
.
.
6 comments:
ஹா ஹா .. அதுதானே , அவன் இவர் கார் நிறுத்துற இடத்துல ஏன் நிறுத்தனும் ? நல்ல பதில் அண்ணா .. ஹி ஹி
அடக்கடவுளே.. தில்லுதுர ரவுசு தாங்க முடியல :))
:)))))))))))))
HHHHHHHHHHHaaaaaaaaaaaaaaa!!!!!!!!!!!!!!1
அவன் காரே வாங்கியிருக்ககூடாது...
துறை சரியாய் தானே எழுதிருகார்
Post a Comment