ராமசாமி ஒரு தீவிர கடவுள் பக்தன்.
அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி என ஒன்று விடாமல் விரதம் இருந்து சாமி கும்பிடுவதே அவன் வேலை.
சூரியன் உதிப்பதிலிருந்து, மறையும் வரை ராமசாமி கும்பிடும் அளவுக்கு யாராலும் சாமி கும்பிட முடியாது.
ஆனால், பக்கத்து வீட்டு பரமானந்தமோ ஒரு தீவிர நாத்திகன்.
கோவில் பக்கம் தலை வைத்ததுகூட இல்லை.
சிவராத்திரி என்றாலும் சினிமாதான் போவான்.
ஆனாலும் அவன் வாழ்க்கை என்னவோ சிறப்பாகவே இருந்தது.
நல்ல வேலை.அருமையான அழகிய மனைவி. கார், பங்களா, குழந்தைகள் என எல்லா விதத்திலும் பரமானந்தம் கொடுத்து வைத்தவன் தான்.
ஆனால், ராமசாமி நிலையோ தலைகீழ்.
மட்டமான சம்பளம். கீழ்படியாத மனைவி.அடங்காத குழந்தைகள்.
வாழ்க்கையில் அவனுடைய நாள் வரவேயில்லை.
வாழ்க்கை வெறுத்துப்போன ராமசாமி, ஒருநாள் எப்போதும்போல் மனமுருக பிரார்த்தித்து, கடவுளைப் பார்த்துக் கேட்டான்.
"ஏ கடவுளே... நான் டெய்லி உன்னை கும்பிடறேன். என்னோட ஒவ்வொரு விஷயத்தையும் உன்னை கேட்டுட்டுதான் செய்யறேன். என்னோட ஒவ்வொரு சின்னச்சின்ன பாவத்தையும் உன்கிட்ட சொல்லி மன்னிப்பு கேக்கறேன். ஆனா, அந்தப் பக்கத்துவீட்டு பரமானந்தம் உன்னைக் கும்பிடறது கூடக் கிடையாது... அவன் சந்தோஷமா நல்லா இருக்கான். நான் மட்டும் எப்பவும் கஷ்டப்பட்டுகிட்டு பணம் இல்லாம... எனக்கு மட்டும் ஏன் இந்த வாழ்க்கை..?".
ராமசாமி கேட்டு முடித்ததும் வானத்திலிருந்து அந்த அசரீரி கேட்டது.
"ஏன்னா... அவன் இப்படி எல்லாத்துக்கும் உன்னைய மாதிரி ச்சும்மா நொய்யி நொய்யின்னு என்னை தொந்தரவு பண்ணறது இல்ல, அதனாலதான்..! போடா... போயி வேலையப் பாரு...!".
.

10 comments:
:-)
ச்சும்மா நொய்யி நொய்யின்னு.. :)
:)))
so good :-)
கடவுளே...
...ராமசாமி!, ராமம் சாமி !!
Many time humans missed to take diamond as normal stone including this author ............
ரைட்டு...
பாவம் அந்த மனசுனுக்கு வேலை இருக்காதா . எப்ப பாரு ராமசாமி சொல்றத கேட்டுட்டு இருந்தா அவர் கஷ்டத்த யார்ட்ட போய் புலம்புவாறு . ராமசாமி கடவுள் பக்தன் . பரமானந்தா நாத்திகன் நல்ல கற்பனை
ஹா.. ஹா..
அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தால் கிடைக்காது!!
கடவுளை வணங்குங்கள்.. அவரிடம் எதையாவது கேட்டுக் கொண்டே இருக்காதீர்கள்!
Post a Comment