Monday, March 12, 2012

சர்க்கரை இல்லாத தேநீர்












ஷிர்டியில் சாய்பாபா வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்தது இது.

ஷிர்டியில் இருந்து தொலைவில் இருந்த தாணே-வில் சிவில் கோர்ட்டில் ஒரு தற்காலிக வேலை பார்த்து வந்தவர் சோல்கர்... பயங்கர ஏழை.
ஒரு சமயம் சாயியைப் பற்றிய கீர்த்தனைகளை கேட்க நேர்ந்த அவர், தான் எழுதும் பரிட்சையில் வென்று தனக்கு ஒரு நிரந்தர வேலை கிடைத்தால் ஷிர்டி வந்து சாயியை தரிசித்து, அங்கே கல்கண்டு விநியோகம் செய்வதாய் வேண்டிக் கொண்டார்.

சொன்னது போல் சோல்கரின் வேண்டுதல் நிறைவேறவும் செய்தது.

குடும்ப முன்னேற்றத்திற்க்காக இமயமலையைக் கூட தாண்டிவிடும் ஒரு குடும்பஸ்தனால், குடும்பத்தை மீறி தன் வீட்டு வாசற்படியை தாண்ட முடிவதில்லை என்பது நிதர்சனம்.

நல்ல வேலையும் சம்பளமும் இப்போது கிடைத்தாலும் குடும்பத் தேவைகள் அவரை தனது பிரார்த்தனையை நிறைவேற்ற விடாமல் வாட்டிக் கொண்டிருந்தன.

இதனால், தனது பிரார்த்தனையை முடிக்க ஒரு உபாயம் செய்தார்.

ஷிர்டி செல்லும் பயணத்துக்குத் தேவையான பணத்தை சேமிக்க உணவிலும் தேநீரிலும் சர்க்கரை இல்லாமல் சாப்பிட்டு அந்த பணத்தை சேமிக்க முடிவு செய்து, அதை செயல்படுத்தவும் ஆரம்பித்தார்.

கொஞ்சகாலம், கற்கண்டை விநியோகிக்க சர்க்கரை அற்ற கசப்பான தேநீர் குடித்ததன் மூலம் மிச்சம் பிடித்த பணத்தை சேமித்த சோல்கர், தேவையான பணம் சேர்ந்ததும் ஷிர்டி வந்து பாபாவின் பாதத்தில் வீழ்ந்தார்.

தான் பட்ட கஷ்டத்தை மறைத்து, தனது ஆசை பூர்த்தியான மனமகிழ்ச்சியுடன் பாபாவுக்கு தான் கொண்டு வந்த தேங்காயை அர்ப்பணித்துவிட்டு தனது வேண்டுதலான கற்கண்டையும் விநியோகித்தார் சோல்கர்.

நீண்டதூரம் பயணித்து தம்மை தரிசிக்க வந்த பக்தருக்கு உணவளிக்க உதவியாளரை அழைத்த பாபா புன்னகையுடன் சொன்னார்.

"விருந்தினர் சோல்கருக்கு மனம் நிறைய உணவளியுங்கள். அதற்கு முன்னர் அவருக்கு சர்க்கரை நிறைமுழுதுமாய் கரைக்கப்பட்ட தேநீரைக் கொடுங்கள்.!".

பாபா இவ்வாறு சொல்ல, கண்களில் கரகரவென நீர்வழிய, மெய்சிலிர்த்து... சோல்கர் மறுபடி பாபாவின் காலில் விழுவதை அங்கிருந்தவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

.

.

.

3 comments:

maithriim said...

Every time you read this story, the realization that anything done with love is so appreciated by God. Thanks for reminding that now :)
amas32

Rekha raghavan said...

சோல்கர் கண்களிருந்து மட்டுமா கண்ணீர் கர கரவென வழிந்தது? படித்தஎன் கண்களிலிருந்தும். பகிர்வுக்கு நன்றி.

தாய்மனம் said...

கதை என்றாலும் இதில் பலருக்கும் பல வகைகளில் நல்ல உணர்வு கிடைக்கும் வகையில் எழுதி இருக்கிரிங்க.

குறிப்பா, நல்லது செய்வது, நல்லவனாக வாழ்வது, வேஸ்ட்டு என்று நினைக்க தோன்றும் இந்நாளில், இந்த கதை மாற்றி சிந்திக்க வைக்குது

Post a Comment