Wednesday, February 8, 2012

வாலன்டைன் தினத்தில் தில்லுதுர

பிப்ரவரி - 14 வாலன்டைன் தினத்தன்று காலையில் படுக்கையிலிருந்து கண்விழித்த மனைவி, தில்லுதுரயை எழுப்பினாள்.

"என்னங்க.. என்னங்க... எந்திரிங்க...!".

"என்னடி.?"

கொட்டாவியுடன் கண்விழித்த தில்லுதுரயிடம் அவள் சொன்னாள்.

"என்னங்க... இன்னிக்கு கண்ணு முழிக்கும்போது ஒரு கனவுங்க. அதுல, நீங்க இன்னிக்கு வாலன்டைன்ஸ் தினத்துக்காக எனக்கு ஒரு வைர நெக்லஸ் வாங்கித் தர்றீங்க. இதுக்கு என்ன அர்த்தம்னு உங்களுக்குத் தெரியுதா...?".

ஆவலுடன் கேட்ட மனைவியின் முகத்தைப் பார்த்த தில்லுதுர, புன்னகையுடன் சொன்னார்.

"இன்னிக்கு சாயங்காலம் தெரிஞ்சுக்குவ...!".

சொன்னபடி சாயங்காலம் திரும்பிய தில்லுதுர கையில், சிறிய செவ்வகமான... கிஃப்ட் பேப்பரில் சுற்றப்பட்டிருந்த பார்சல் இருந்ததும், அவன் மனைவி மகிழ்ச்சியின் உச்சத்துக்கே போய்விட்டாள்.

தில்லுதுர நீட்டியதும், அந்தப் பார்சலை ஆர்வத்துடன் வாங்கிப் பிரித்த அவன் மனைவி, திகைத்துப் போய் தில்லுதுரயைப் பார்த்தாள்.

அதில், "கனவுகளும் அதன் பலன்களும்.." என்ற புத்தகம் இருந்தது.
.
.
.

5 comments:

sutha said...

ha ha - hilarious

Anonymous said...

super @shanthhi

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தூக்கி மூஞ்சில அடிக்கலயே?

anandrajah said...

எனது கனவுகளும் இதில் "அடக்கம்"....! வைரம் வாங்கினேன்.. ஆனா.. என்னவளின் ராசிக்கு சரியில்லையாம்..! கனவாகவே போய்விட்டது என் கனவு. #பாழப்போன ஜோசியம்..!

maithriim said...

Abbaa!! Very funny :)) You have a way with words :)
amas32

Post a Comment